மாணவர்கள் தினமும் சிறிது நேரம் தங்கள் வளர்ச்சிக்கு முதலீடு செய்யும் எண்ணத்துடன் விவேகானந்தா இளைஞர் பேரவை, செம்பாக்கம் கிளை Whatsapp மூலம் அடுத்த 4 வாரங்களுக்கு போட்டிகள் நடத்தவுள்ளது.
ஆர்வம் இருப்பவர்கள் தொடர்ந்து படிக்கவும். விருப்பமுள்ளவர்கள் தனியே message அனுப்பவும். அவர்களுக்கு மட்டும் broadcast list மூலம் தினசரி தகவல்கள் அனுப்பப்படும்
*போட்டிகள் துவங்கும் நாள் : மார்ச் 26 - வியாழன்*
*நடைபெறவுள்ள போட்டிகள்*
*ஒவ்வொரு வியாழக்கிழமை : கேள்வி - பதில் / விடுகதை*
10 கேள்விகள் Whatsapp மூலம் அனுப்பப்படும் காலை 10 மணிக்கு அனுப்பப்படும். Internet ல் விடை தேடவும் அனுமதி உண்டு . மாலை 5 மணிக்குள் குறிப்பிடும் எண்ணுக்கு Whatsapp மூலம் விடைகள் அனுப்பலாம்.
*ஒவ்வொரு வெள்ளிக்கிழமை : ஓவிய போட்டி*
காலை 10 மணிக்கு theme அனுப்பப்படும். மாலை 5 மணிக்குள் வரைந்த ஓவியத்தை photo எடுத்து அனுப்ப வேண்டும். பார்த்தும் வரையலாம். (Stationeries , colours தேடி கடைகளுக்கு செல்ல வேண்டாம். இருக்கும் பொருட்களை மட்டுமே பயன்படுத்தவும்)
*ஒவ்வொரு சனிக்கிழமை - கதை சொல்லுதல்*
Theme வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும். சனிக்கிழமை மாலை 5 மணிக்குள் ஆடியோ அனுப்பவும்
*ஒவ்வொரு ஞாயிறு - குறுக்கெழுத்து போட்டி*
காலை 10 மணிக்கு அனுப்பப்படும். விடைகளை மாலை 5 மணிக்குள் அனுப்பவும்
*ஒவ்வொரு திங்கள் - கீதை / சுலோகம்*
எந்த சுலோகம் என்று வெள்ளிக்கிழமை அனுப்பப்படும். இரண்டு நாளில் தயார் செய்து திங்களன்று ஆடியோ மூலம் அனுப்ப வேண்டும்
*ஒவ்வொரு செவ்வாய் - பாட்டு போட்டி*
ஏதேனும் ஒரு பாடலை 3 நிமிடங்களுக்கு மிகாமல் பாடி, மாலை 5 மணிக்குள் ஆடியோ அனுப்பவும்
*ஒவ்வொரு புதன் - திருக்குறள் / இலக்கிய பாடல்*
எந்த குறள் / பாடல் என்று ஞாயிறு அன்று அனுப்பப்படும். மாணவர்கள் தயார் செய்து புதன் அன்று ஆடியோ அனுப்ப வேண்டும்
*Category*
LKG - UKG
I - III STD
IV - VI STD
VII - IX STD
வரும் ஆண்டு எந்த வகுப்பு செல்கிறார்களோ, அதுவே கணக்கில் கொள்ள வேண்டும்
*பரிசுகள்*
கேள்வி - பதில் தவிர்த்து, பிற போட்டிகளுக்கு, ஒவ்வொரு category - இன் கீழ் தினசரி ஒருவருக்கு பரிசு வழங்கப்படும். வெற்றி பெற்றவர் பெயர், போட்டிக்கு மறுநாள் whatsapp மூலம் அறிவிக்கப்படும்
கேள்வி பதில், III STD வரை ஒரு பிரிவாகவும், IV - IX ஒரு பிரிவாகவும் கேள்விகள் இருக்கும்.
கேள்வி - பதில் போட்டியை பொறுத்தவரை மட்டும், தினசரி வெற்றியாளருக்கு பதிலாக, 4 வாரங்களுக்கும் சேர்த்து, ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பெறுவோருக்கு பரிசு.
*பரிசளிப்பு விழா*
வெற்றி பெற்றவர்களுக்கு மே அல்லது ஜூன் மாதம் பரிசுகள் வழங்கப்படும்.
*விருப்பம் உள்ளவர்கள் 8144326016 எண்ணிற்கு தகவல் அனுப்பவும். உங்கள் எண்ணை broadcast list -ல் சேர்ப்போம்*
*பின்வரும் எண்களை உங்கள் mobile -ல் save செய்யவும். அப்போது தான் broadcast மூலம் அனுப்பப்படும் தகவல்கள் உங்களுக்கு கிடைக்கும்*
ரமேஷ் 9952921640
கணபதி ரமணன் 89390 96512
ஜவஹர் 9551623296
சிவராமகிருஷ்ணன் 8144326016
*குறிப்பு*
இதில் சேர கடைசி தேதி எதுவும் இல்லை
மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான எந்த போட்டியிலும் கலந்துக் கொள்ளலாம்
பெற்றோர்கள் தான் invigilators. எனவே உங்கள் குழந்தைகளுக்கு ஓரளவுக்கு மட்டுமே உதவவும்
இது ஒரு பரீட்சார்த்த முயற்சி, எனவே சில பிசிறுகள் வரக்கூடும்
இந்த பணியில் எங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவோர் மற்றும் evaluator -ஆக இருக்க விரும்புவோர், ஆலோசனைகள் சொல்ல விரும்புவோரை வரவேற்கிறோம்.