தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் கரோனா பாதிப்பு 1,372 ஆக இருந்த நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை 1,477 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று அதிகபட்சமாக சென்னையில் ஒரேநாளில் 50 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று குணமடைந்தோர் எண்ணிக்கை 46. மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 411. உயிரிழப்பு 15 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 21,381. மேலும், 20 பேர் அரசுக் கண்காணிப்பில் உள்ளனர். இதில் 28 நாள்கள் கண்காணிப்பு முடித்தவர்கள் 85,253. தமிழகத்தில் 21 அரசு ஆய்வகங்கள், 10 தனியார் ஆய்வகங்கள் என 31 ஆய்வகங்கள் உள்ளன.
இதுவரை 40,876 கரோனா தொற்று மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 5,840 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்றைக்கு புதிதாக 105 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்குறிப்புட தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பாதிப்பு: 1,477
உயிரிழந்தோர் எண்ணிக்கை: 15
குணமடைந்தோர் எண்ணிக்கை: 411
Source: Dinamani