t> கல்விச்சுடர் தகுதி அடிப்படையில் அரசுப்பணி; கொரோனா தடுப்பு பணியின்போது உயிரிழக்கும் ஊழியர்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

22 April 2020

தகுதி அடிப்படையில் அரசுப்பணி; கொரோனா தடுப்பு பணியின்போது உயிரிழக்கும் ஊழியர்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு


கொரோனா தடுப்பு பணியின்போது தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் ஊழியர்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்தியா உள்ளிட்ட 205 நாடுகளும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.இந்தியளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தை பொருத்தவரை கொரோனாவால் இதுவரை 1596 பேர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 18 பேர் உயிரிழந்த நிலையில், 635 பேர் குணமடைந்துள்ளனர். இருப்பினும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்திலும், பல்வேறு நிவாரண உதவிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.இந்நிலையில், கொரோனா தடுப்பு பணியின்போது தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் ஊழியர்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ரூ.50 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணியின்போது தொற்றால் உயிரிழப்பவரின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசுப்பணி வழங்கப்படும் என்றும் கொரோனா தடுப்பு பணியில் உள்ள மருத்துவ ஊழியர்கள், பிற துறை அலுவலர்களுக்கு விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்றார்.கொரோனா தடுப்பு பணியின் போது உயிரிழந்தவர்களின் உடல் பாதுகாப்புடனும், உரிய மரியாதையுடனும் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னையில் செய்யப்பட்டு வரும் பரிசோதனைகளை உயர்த்தவும், முடிவுகள் உடனுக்குடன் பெற நடவடிக்கை எடுக்கவும் என்றார். சென்னையில் மூச்சிரைப்பு, காய்ச்சல், தொண்டை வலி போன்ற அறிகுறி இருந்தால் உடனே பரிசோதிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.தனியார் மருத்துமனையில் குறிப்பிட்ட மருத்துவமனையில் முழுமையாக தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 

தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைக்கு பின் மருத்துவ பணியை தொடர அனுமதிக்கப்படும் என முதல்வர் கூறியுள்ளார். சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த கூடுதலாக 2 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.முதலமைச்சர் ஆறுதல்இதற்கிடையே, கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஆறுதல் தெரிவித்தார். மருத்துவரின் மனைவி, மகனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதலமைச்சர் பழனிசாமி, எதிர்கால நலன் கருதி தைரியமாக இருக்க ஆறுதல் தெரிவித்துள்ளார்.

முதல்வர் அறிக்கை DOWNLOAD செய்ய Click Here

JOIN KALVICHUDAR CHANNEL