அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படக்கூடிய 525 தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது தொடர்பான அட்டவணை ஏற்கெனவே வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது நிலவி வரும் கொரோனா பரவல் குறித்த அச்சம் காரணமாகவும், 144 தடை உத்தரவு அமலில் இருப்பதன் காரணமாகவும் ஏற்கனவே வெளியிடப்பட்டு இருந்த அட்டவணை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 144 தடை அமல் முடிவுக்கு வந்தபிறகு, செமஸ்டர் தேர்வுகள் தொடர்பான புதிய அட்டவணை வெளியிடப்படும் எனவும் அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தகவல்களுக்கு : https://www.annauniv.edu/