உலகின் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அமலில் இருப்பதால் வீடுகளில் முடங்கியுள்ள மக்கள் ஆன்லைன் விளையாட்டுகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கொரோனா பரவாமல் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, பொழுது போக்கு இடங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
அவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மக்கள், கடந்த மாதம் 16ம் தேதி முதல் 22ம் தேதி வரை 24 லட்சம் விளையாட்டுகளை பதிவிறக்கம் செய்து விளையாடியுள்ளனர்.
இதுபோல ஆன்லைன் விளையாட்டுகளில் மக்களின் ஆர்வம் அதிகரித்திருப்பதால், அத்துறை தொடர்பான வணிகம் சூடுபிடித்திருப்பதாக புள்ளி விவரம் கூறுகிறது.
Source: Polimer News