t> கல்விச்சுடர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ரத்து செய்யப்படுமா? ‘அந்த கேள்விக்கே இடமில்லை’ என அமைச்சர் செங்கோட்டையன் பதில் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

10 April 2020

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ரத்து செய்யப்படுமா? ‘அந்த கேள்விக்கே இடமில்லை’ என அமைச்சர் செங்கோட்டையன் பதில்


கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தள்ளிவைப்பதாக அறிவித்தார். அதன்படி, வருகிற 15-ந்தேதி முதல் அந்த தேர்வு நடைபெறும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருவதோடு, இதன் காரணமாக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு குறித்த பல்வேறு செய்திகளும் உலா வருகின்றன.இதனால் மாணவர்களும், பெற்றோரும் குழப்பத்தில் இருக்கின்றனர்.இந்தநிலையில், இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று விளக்கம் அளித்தார். 
அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு குறித்து என்ன முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது?

பதில்:- 14-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. அதன்பிறகு இருக்கும் நிலைமையை பொறுத்து, இறுதி முடிவை முதல்-அமைச்சர் தான் தெரிவிப்பார். பள்ளிக்கல்வி துறை தயார்நிலையில் தான் இருக்கிறது.

கேள்விக்கே இடமில்லை

கேள்வி:- எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை ரத்து செய்தால், என்ன விளைவு ஏற்படும்?

பதில்:- ரத்து செய்யும் கேள்விக்கே இடமில்லை.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

JOIN KALVICHUDAR CHANNEL