ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டால் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு மாநில முதலமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் பிசிசிஐ அதிகாரி ஒருவர் பேசும்போது, பஞ்சாப், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதாகக் கூறிய அவர், இதனால் ஐபிஎல் தற்போதைக்கு நடக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார். ஆனால் அது நிச்சயமாக ரத்து செய்யப்படாது என்றும் காலவரையின்றி ஒத்திவைக்கப்படலாம் என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
முன்னதாக ஐபிஎல் போட்டிகள் முதலில் மார்ச் 29 முதல் மே 24 வரை நடைபெற திட்டமிடப்பட்டது. ஆனால் நாட்டில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பத்ததால் ஏப்ரல் 15 வரை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.