. -->

Now Online

FLASH NEWS


Wednesday 8 July 2020

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு: பெற்றோர்கள், ஆசிரியர்கள் எதிர்ப்பு



 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்குப் பெற்றோர்களும், ஆசிரியர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழக கல்வி அமைச்சர் ஜூலை 13ஆம் தேதி முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என அறிவித்துள்ளார். இவ்வாறு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்குப் பெற்றோர்களும், ஆசிரியர்கள் தரப்பிலும் மிகப்பெரிய எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் அமைப்பைச் சேர்ந்த ஒருசில நிர்வாகிகளும்,  ஒரு சில பெற்றோர்களும் தெரிவித்துள்ள கருத்துக்களாவது,
 
 அரசுப்பள்ளிகளில் மிகப் பெரும்பாலும் கிராமப் பகுதிகளைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் தான் படித்து வருகின்றனர். இந்த மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரிடமும் ஆண்ட்ராய்டு கைப்பேசி வசதி இருப்பது என்பது சாத்தியமில்லை. மேலும் கைப்பேசி இருந்தால்கூட தற்போது நகரப்பகுதிகளில் இணையதள வசதி  கிடைப்பது என்பதே சிரமமாக உள்ளது. இவ்வாறிருக்கையில் கிராமப்பகுதிகளில் இணையதள வசதி எவ்வாறு சரியாக கிடைக்கும் என அச்சம் தெரிவிக்கின்றனர்.மேலும் பள்ளி வகுப்பறைகளில் நேரடியாக  வகுப்புகள் எடுக்கும்போது, மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை  நிவர்த்தி செய்து கொள்ளக்கூடிய வாய்ப்பு உண்டு. மேலும் ஆசிரியர்கள் மாணவர்களின் கவனிப்புத் திறனைக் கண்டறியும் வாய்ப்பும் உள்ளது.ஆனால் ஆன்லைன் வகுப்புகளில்  இந்த வசதிகள் கிடைக்காது என  பெற்றோர்கள் தயக்கம் தெரிவிக்கின்றனர்.தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் ஓரளவு வசதி படைத்தவர்கள் என்ற காரணத்தினால், ஆண்ட்ராய்டு கைப்பேசி வைத்திருப்பதற்கு வாய்ப்புண்டு. எனவே தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு நடத்துவது என்பது சரியாக இருக்கும். எனவே கிராமப்புற, ஏழை, எளிய  மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்துவது என்ற முடிவினை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Source Dinamani