TNTP STATE LEVEL ACHIEVEMENT AWARD
கற்றல் கற்பித்தல் வளங்களை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயனுள்ள வகையில் பகிர்ந்து வருவதோடு மட்டுமன்றி தமிழ்நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் TNTP எனப்படும் TAMILNADU TEACHERS PLATFORM தமிழ்நாடு ஆசிரியர்களின் கற்றல் தளத்திலும் பகிர்ந்து அதில் அதிகமான இ-கன்டென்ட்டை தயாரித்து E -CONTENT பகிர்ந்து வருகிறார்.
இதனை பாராட்டும் விதமாக E CONTENT யை TNTP ல் பங்களிப்பு செய்யும் தமிழ்நாட்டில் சிறந்த பத்து ஆசிரியர்களுள் ஒருவராக திருவள்ளூர் மாவட்டத்தில் கடம்பத்தூர் ஒன்றியம் ஒண்டிக்குப்பம் தொடக்கப் பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் கோபிநாத் அவர்களை தேர்வுக்குழுவினர் தேர்வு செய்துள்ளனர்.
இந்த நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் தமிழக அமைச்சர் திரு.மாஃபா பாண்டியராஜன் அவர்களின் கரங்களால் விருது பெற்றுக்கொண்டார்.
இந்த தருணத்தை கல்விச்சுடர் வலைதளத்தில் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைவதாக கூறினார்.
இதுபற்றி மேலும் அவர் கூறுகையில்,
கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகளின் நாயகன் திரு.ஞா.செல்வகுமார் தேசிய ICT விருதாளர் மூலம் இந்த தொழில்நுட்ப உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டு துணைக் கருவிகள் தயாரிக்க வழிகாட்டியாய் இருந்து என்னை உருவாக்கிய ஆசான் அவர்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன் என்றும்
நண்பர் திரு.தென்னரசு திருவள்ளூர் மாவட்டத்தின் கனவு ஆசிரியர் அவர்களுடன் இணைந்து பயணிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் கூறினார்.
அவருக்கு கல்விச்சுடர் இணையதளம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.