. -->

Now Online

FLASH NEWS


Tuesday 26 January 2021

வருமான வரி குறித்து முழுமையான தகவல்


பழைய முறை மற்றும் புதிய முறை


*வருமானவரி -சில பயனுள்ள தகவல்கள்


*2020 - 2021 ஆம்  நிதியாண்டின் வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள  வேண்டியவை...
 
பழைய விதிமுறைபடி வரி கணக்கீடு - பிரிவு 115BAC
 
4 வது பக்கத்தில் மாத சம்பளத்துடன் நிலுவை ஊதியம் பெற்று இருப்பின் அதையும் காண்பிக்க வேண்டும். [Bonus, surrender, pay fix arrear if any]


நிலையான கழிவு (Standard deduction) ₹50,000/- ஐ மொத்த வருமானத்தில் அனைவரும் கழித்துக் கொள்ளலாம்.
 
housing loan பிடித்தம் செய்பவர்கள் HRA கழிக்கக் கூடாது.
 
மாற்றுத்திறன் ஆசிரியர்கள் தொழில்வரி செலுத்தத் தேவையில்லை. மேலும் சம்பளத்தில் பெறக்கூடிய  போக்குவரத்து பயணப்படியை Entertainment Allowance ல் கழித்துக் கொள்ளலாம்.
 
housing loan - வட்டி அதிகபட்சமாக ₹2,00,000/- வரை கழித்துக் கொள்ளலாம். (01.04.1999 க்கு பிறகு வீட்டுக்கடன் பெற்றிருக்க வேண்டும். 01.04.1999 க்கு முன் பெற்றிருந்தால் ₹30,000/- மட்டுமே வரிச்சலுகை பெற முடியும்)
 
housing loan - அசல் தொகையை  Under chapter -VI ல் கழித்துக் கொள்ளலாம்.
 
housing loan - அசல் மற்றும் வட்டி கழிப்பவர்கள் 12C படிவம் வைக்க வேண்டும்.
 
CPS திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் Under chapter -VI ல் சேமிப்பு 1,50,000 க்கு மேல் இருந்தால், செலுத்திய CPS  தொகையில்  அதிகபட்சமாக ₹50,000/- வரை 80CCD(1B) ல் கழித்துக் கொள்ளலாம்.
 
School fees - குழந்தைகளின் tuition fee மட்டும் கழிக்க வேண்டும். Other fees ஏதும் கழிக்கக் கூடாது. (அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மட்டும்)
 
LIC & PLI : பிரீமியம் தொகை மட்டும் கழிக்க வேண்டும். Late fee கழிக்கக் கூடாது. (LIC Statement பெற்று,  படிவத்துடன் இணைக்கவும்).
 
80DDB - Medical Treatment - ₹80,000/- வரை காண்பிப்பவர்
10 - I படிவத்தில் மருத்துவரிடம் சான்று பெற்று இணைக்க வேண்டும்.
[Citizens - ₹40,000,
Senior Citizens - ₹60,000,
Super Senior Citizens - ₹80,000]
 
மாற்றுத்திறன் ஆசிரியர்கள் ஆண்டு முழுவதும் Medical treatment க்காக ₹75,000/- ஐ 80DD ல் கழித்துக் கொள்ளலாம்.(₹1,25,000 - In case of severe disability)
 
மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் NHIS தொகையை 80D ல் கழித்துக் கொள்ளலாம்.
 
கல்விக் கடனுக்காக  இந்த நிதியாண்டில் (2020-2021) செலுத்திய வட்டியை முழுவதும் 80E ல் கழித்துக் கொள்ளலாம்.
 
80EEA - மலிவு வீட்டு வசதிக்கான வீட்டுக் கடனில் கூடுதலாக ₹1,50,000 வரை வட்டியில் வரிச் சலுகை பெறலாம்.
 
நிபந்தனைகள்
 
🔹01.04.2019 முதல் 31.03.2020 க்குள் முதல் முறையாக வீட்டுக்கடன் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
 
🔹வீட்டு சொத்தின் முத்திரை வரி மதிப்பு ₹45,00,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
 
🔹வீட்டின் தரை பரப்பளவு பெருநகரங்களில் 645 சதுர அடிக்கு மிகாமல், மற்ற நகரங்களில் 968 சதுர அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
 
80EEB - 01.04.2019 முதல் 31.03.2023 க்குள் கடன் அனுமதி பெற்று, மின்சார வாகனங்கள் வாங்குவதற்கு செலுத்தப்படும் வட்டிக்கு ₹1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம்.


* விரைவில் Professional Tax கட்டி ரசீது வாங்கிக் கொள்ளுங்கள். ( அனைவருக்கும் ₹1250)

* இரண்டு IT படிவம் உரிய ஆவணங்களோடு தயார்படுத்திக் கொள்ளுங்கள். அநேகமாக பிப்ரவரி 10 இல் சமர்ப்பிக்க வேண்டி வரும்.

* ஒரு நாள் கொரோனா பேரிடர் நிவாரண நிதி அளித்ததை கழித்து கொள்ளலாம். கூடுதலாக தனிப்பட்டு யாரும் அளித்திருந்தால் அதற்குரிய சலான் (அ) ஒப்புகை ரசீதை இணைத்து காட்டி அதனையும் கழித்துக் கொள்ளலாம். 

* இம்முறை வரிதாக்கலில் பழைய முறை, புதிய முறை என்று இரண்டு வகை உள்ளது. தங்களுக்கு பலனளிக்கும் முறை எது என்பதை கணக்கிட்டு அந்த முறையில் சமர்ப்பிக்கலாம். ஆனால் ஒருமுறை புதிய வரிவிதிப்பு முறைக்கு மாறி விட்டால் மீண்டும் பழைய முறைக்கு மாற முடியாது. எப்போதும் புதிய முறையிலேயே தொடர வேண்டும்.

*பழைய முறை

இது வழக்கமாக நாம் சமர்ப்பிக்கும் முறை.  தேவையான கழிவுகள்  (Deductions) கழித்து இறுதியில் வரும் வரிக்கான வருமானத்திற்கு (Taxable Income) வரி செலுத்துவது. 
250000 வரை - வரி இல்லை
250000 - 500000 வரை - 5% 
500000 - 1000000 வரை - 20% 
1000000 க்கு மேல் - 30% 


* *புதிய முறை*

இது கடந்தாண்டு மத்திய அரசு அறிமுகம் செய்த முறை. இதில் எந்தக் கழிவும் இல்லை. கழிவுக்கான எந்த ஆவணமும் தேவையில்லை. ஒட்டுமொத்த நிகர வருமானத்தை (Gross Income) கொண்டு வரி விதிக்கப்படும். 

250000 வரை - வரி இல்லை
250000 - 500000 வரை - 5% ( tax rebate is available) 
500000 - 750000 வரை - 10%
750000 - 1000000 வரை - 15%
1000000 - 1250000 - 20% 
1250000 - 1500000 - 25% 
1500000 க்கு மேல் - 30%

* புதிய முறைக்கு மாற எண்ணுபவர்கள் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் வீட்டுக்கடன் (Housing Loan) பெற எதுவும் திட்டமிருந்தால் சற்றே சிந்திக்கவும். தோராயமாக அடுத்த ஓரிரு ஆண்டுகளுக்கு இரண்டு முறைகளிலும் கணக்கிட்டு பார்த்து முடிவெடுக்கவும்.  ஏனெனில் வீட்டுக்கடன் கணிசமாக வரியை குறைக்கும். புதிய முறையில்  வீட்டுக்கடன் வரிவிலக்கு பெற முடியாது. புதிய முறைக்கு மாறிய பின் பழைய முறைக்கு மாற முடியாது. 

* IFHRMS சம்பள முறையால் Epayroll இல் ஆண்டு சம்பளம் முழுமையாக வரவில்லை. பிப்ரவரி முதல் வாரம் வரை பொறுத்திருந்து பார்த்து படிவத்தை தயாரித்த பின் ஆண்டு வருமானப் பட்டியல் (Annual Statement) தரவிறக்கம் (download) செய்து இணைத்துக் கொள்ளுங்கள்.

* அடுத்தடுத்து அனைத்தும் டிஜிட்டலுக்கு மாறி வருவதால் விரைவில் நேரடியாக ஆன்லைனில் சமர்ப்பிக்கும் முறையும் கூட வரலாம். எனவே கணினியில் IT படிவத்தை தயாரிக்கப் பழகி இப்போதைக்கு Hardcopy ஆக சமர்ப்பிக்க பழகிக் கொள்ளுங்கள்.  (எப்போதைக்கும் Softcopy ஆக சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்) ஏனெனில் வருங்காலத்தில் இதுவும் கூட தகவல் மேலாண்மையில் பதியப்படலாம். இந்தாண்டு டிஜிட்டலாக மாற முயற்சிப்போம். வாய்ப்பற்றவர்கள் வழக்கம் போல் படிவத்தில் நிரப்பிக் கொடுக்கலாம்.