t> கல்விச்சுடர் தமிழகத்தில் இன்று மேலும் 470 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மாவட்ட வாரியான விவரம் - தமிழக சுகாதாரத்துறை வெளியீடு (14.02.2021) - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

14 February 2021

தமிழகத்தில் இன்று மேலும் 470 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மாவட்ட வாரியான விவரம் - தமிழக சுகாதாரத்துறை வெளியீடு (14.02.2021)


தமிழகத்தில் இன்று 470 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 8,45,120. சென்னையில் மட்டும் மொத்தம் 2,33,334 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் ஒருவருக்கும் தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 30,06,485.
சென்னையில் 140 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 330 பேருக்குத் தொற்று உள்ளது.



* தற்போது 68 அரசு ஆய்வகங்கள், 186 தனியார் ஆய்வகங்கள் என 254 ஆய்வகங்கள் உள்ளன.
இந்த நிலையில் தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:
 * தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4,260.
 * மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,67,62,668.
 * இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 53,483.
 * மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 8,45,120.
 * இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 470.
 * சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 140.
 * மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 5,10,734 பேர். பெண்கள் 3,34,351 பேர். மூன்றாம் பாலினத்தவர் 35 பேர்.
 * தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 277 பேர். பெண்கள் 193 பேர்.
 * இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 479 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 8,28,441 பேர்.
 * இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 


JOIN KALVICHUDAR CHANNEL