t> கல்விச்சுடர் ஆசிரியர்-அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60ஆக உயர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

25 February 2021

ஆசிரியர்-அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60ஆக உயர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம்


ஆசிரியர்-அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60ஆக உயர்த்தி
வெளியிட்டுள்ள அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம் மாநில பொதுச்செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் கோரிக்கை

புதுக்கோட்டை,பிப்.25:தமிழ்நாடு சட்டமன்றக்கூட்டத்தொடரில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் அவைவிதி 110 இன் கீழ் 25.02.2021அன்று
ஆசிரியர்-அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60ஆக உயர்த்தி 
வெளியிட்டுள்ள அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம் மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
தமிழக அரசு புதிய வேலை வாய்ப்புகள் ஏதும் உருவாக்கிடாத நிலையில்,படித்த இளைஞர்களுக்கு அரசுப்பணி என்பது வெறுங்கனவாகவே இருந்துவருகிறது. 

தற்போது ,தமிழக அரசுப்பணியிடங்களில்,
அவுட்சோர்ச்சிங் முலம் பணியமர்த்தப்படுவதாலும் ,
தமிழ்நாட்டின் மத்திய,மாநில அரசுகளின் பணியிடங்களில் வேறுமாநிலத்தவர்களே அதிகளவில் பணியமர்த்தப்பட்டு வருவதாலும் தமிழகத்தின் 
படித்த இளைஞர்கள் பெரும் விரக்கிஅடைந்துள்ளனர்.வேலை வாய்ப்புக் காக படித்த இளைஞர்களின் பட்டாளம் 
காத்துக்கிடக்கிறது.

இந்நிலையில், 
எவரும், எந்தவொரு கோரிக்கையும் வைத்து வலியுறுத்தி கேட்காத நிலையில் ,தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் அவை விதி 110 இன் கீழ் 
தமிழ்நாட்டின் ஆசிரியர் -அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 59் இல் இருந்து 60் ஆக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டு இருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது.

தமிழ்நாட்டின் ஆசிரியர்-அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 எனும் அறிவிப்பானது ,தற்போது பணியாற்றிவரும் ஆசிரியர்-அரசு ஊழியர்களுக்கு மாதச்சம்பளம் மட்டுமே வழங்கிட முடியும்.
ஓய்வூதியக்காலப்பணப்பலன்கள் எதையும் வழங்கிட இயலாது எனும் நிலையிலேயே தமிழக அரசின் நிதிநிலைமை மிக மோசமான நிலையில் இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்கிறதோ?!என்று தமிழ்நாட்டில் பரவலாக அச்சமும்,ஐயமும் எழுந்துள்ளது.

தமிழகத்தின் படித்த இளைஞர்களின் அரசுவேலைவாய்ப்பினை பறிக்கும்,கனவினை சிதைக்கும் 60 வயதில் பணிநிறைவு எனும் அறிவிப்பை தமிழக முதல்வர் அவர்கள் திரும்பப்பெற்றுக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

JOIN KALVICHUDAR CHANNEL