. -->

Now Online

FLASH NEWS


Sunday 28 February 2021

தேர்தல் கமிஷனுக்கு ஆசிரியர்கள் கோரிக்கை

தேர்தல் கமிஷனுக்கு ஆசிரியர்கள் கோரிக்கை 

தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள்


*தொடர்ந்து பள்ளிக்குச் சென்று ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கும்   ஆசிரியர் பெருமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் ஓய்வு அதிலும்  வீட்டு வேலைகள் நிறைய உள்ளன.

*எனவே தேர்தல் வகுப்புகள் ஞாயிற்றுக்கிழமைகளில்  வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

*வசிப்பிட முகவரியை  வழங்கியும் கூட அவசியமில்லாமல் ஆசிரியர் பெருமக்களை நீண்ட தூரத்தில் உள்ள  மையங்களின் பணி அமர்த்துவதை தடுத்திட வேண்டும்

*பெண் ஆசிரியர்கள் பெருமக்களை எட்டு கிலோமீட்டர் தூரத்திற்குள் பணி அமைத்திட ஏற்பாடு செய்தல் வேண்டும்

*உணவு இடைவெளி, இயற்கை உபாதைகளுக்கான இடைவெளியில்லாமல் மனித உரிமையை மீறும் தேர்தல் விதிமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்த மனித உரிமை கமிஷனிடம் முறையிட வேண்டும்

*எல்லாவற்றுக்கும் மேலாக நமது ஜனநாயக கடமையை நிறைவேற்ற நமது வாக்குரிமையை பணிபுரியும் வாக்கு மையத்திலேயே செலுத்திட அனுமதியை பணி ஆணை வழங்கும் போதே கிடைத்திட ஆவன செய்தல் வேண்டும்

*தேர்தல் பணியில் ஈடுபடும் போது ஏற்படும்  அசம்பாவிதங்களுக்கு 50 லட்சம் ரூபாயும், உயிர் இழப்புகளுக்கு 2 கோடி ரூபாயும் இழப்பீடுகள் வழங்க  வேண்டும் 

இந்த செய்தி சமூக ஊடகங்களில் ஆசிரியர்களால் பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.