t> கல்விச்சுடர் பிளஸ்-2 தேர்வு ஒத்திவைக்கப்படுமா? - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

12 April 2021

பிளஸ்-2 தேர்வு ஒத்திவைக்கப்படுமா?

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் பிளஸ்-2 தேர்வு தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

பிளஸ்-2 தேர்வு மே 3-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரம் மாணவ- மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.

ஏப்ரல் 16-ந் தேதி முதல் செய்முறை தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இந்த இரு தேர்வுகளையும் நடத்துவதா அல்லது தள்ளி வைப்பதா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பிளஸ்-2 தேர்வை ரத்து செய்வதற்கான வாய்ப்பு இல்லை. தற்போது மே 3-ந் தேதி தேர்வை தொடங்கினால் அந்த நேரம் கொரோனா தொற்று உச்சக்கட்டத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த நேரத்தில் தேர்வு நடத்தினால் அது நோய் பரவுவதற்கு வழிவகுத்துவிடும். எனவே தேர்வை வேறு ஒரு தேதிக்கு ஒத்தி வைக்கலாமா? என்பது குறித்து விவாதித்தனர். இதுகுறித்தும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அது பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


JOIN KALVICHUDAR CHANNEL