தமிழகத்தில் இன்று 3,446 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று தமிழகத்தில் 14 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 1,834 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் மட்டும் 1,290 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் உச்சக்கட்ட வேகத்தில் கொரோனா பரவுவதாகவும் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
