தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை
தமிழகத்தில் இன்று (ஏப்.,8) 4,276 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,15,386 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் உள்ள 260 ஆய்வகங்கள் (அரசு- 69 மற்றும் தனியார்-191) மூலமாக, இன்று மட்டும் 85,281 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 2 கோடியே 2 லட்சத்து 58 ஆயிரத்து 907 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இன்று கொரோனா உறுதியானவர்களில், 2,593 பேர் ஆண்கள், 1,683 பேர் பெண்கள் என பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 5,52,545 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 3,62,805 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 36 ஆகவும் உள்ளது.
மாவட்ட வாரியான விவரம்