தூக்கத்தில் மூச்சு திணறல் உள்ளவர்கள் குறித்து மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
சிலருக்கு தூங்கும்போது சுவாச பிரச்சினை ஏற்படும். அவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சரியாக தூங்க முடியாது.
இத்தகைய நபர்களை கொரோனா தாக்கினால் அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவ ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இது சம்பந்தமாக மத்திய பிரதேசம் மாநிலம் போ பாலில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
கடந்த ஆண்டு நோய் தாக்கம் உச்சத்தில் இருந்த போது அக்டோபர் முதல் டிசம்பர் வரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 67 கொரோனா நோயாளிகளை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர்.
இவர்கள் தூக்கத்தின் போது மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். அவர்களுக்கு கொரோனா தொற்றும் சேர்ந்து இருந்ததால் அவர்கள் கடுமையாக கஷ்டப்பட்டது தெரிய வந்தது.
எனவே தூக்கத்தில் மூச்சு திணறல் உள்ளவர்கள் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் மிக கவனமாக இருக்க வேண்டும். அவர்களுக்கு தீவிர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இந்த ஆய்வை மேற்கொண்ட குழுவின் தலைவர் டாக்டர் அபிஷேக் கோயல் கூறியுள்ளார்.
இத்தகைய நோயாளிகளுக்கு ஆக்சிஜன் மூலம் சுவாசம் அளித்தாலும் கூட பாதிப்பு ஏற்படுவதாக டாக்டர்கள் கூறினார்கள்.