t> கல்விச்சுடர் திடீர் தலைவலிக்கு திடீர் வைத்திய முறைகள். - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

24 April 2021

திடீர் தலைவலிக்கு திடீர் வைத்திய முறைகள்.




தலைவலியும் வயிற்று வலியும் தனக்கு வந்தால் தெரியுமென்று கூறுவார்கள் .தலைவலி வந்தால் அது படுத்தும் வேதனையில் எந்த வேலையும் செய்ய முடியாது .இதற்கு பல காரணிகள் உண்டு .இருந்தாலும்

பெரும்பாலானவர்களுக்கு, அதிகமான மன அழுத்தம் காரணமாகவே பெரும்பாலும் தலைவலி ஏற்படுகிறது.

இன்னும் சிலருக்கோ, குறைவான சர்க்கரை அளவு, ஒவ்வாமை, சில மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வது, சத்துக் குறைபாடு, அதிகப்படியான வேலை, சரியான தூக்கம் மற்றும் ஓய்வு இல்லாமை, அதிகப்படியான குடிப்பழக்கம், புகைப்பழக்கம் காரணமாகவும் தலைவலி ஏற்படும்.

இந்த தலைவலிக்கு உதவும் தலை சிறந்த வைத்திய முறைகளை குறிப்பிட்டுள்ளோம்

1.கொதிக்கும் தண்ணீரில் காப்பிக் கொட்டை தூளைப் போட்டு ஆவி பிடிக்க தலைவலி குறையும்.

2.வெற்றிலை சாறு எடுத்துக் அதில் கற்பூரத்தைப் போட்டு நன்றாக குழைத்துப் பூசவும் தலைவலி தீரும்.

3.கிராம்பு, சீரகம் ஆகியவற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் சூட்டினால் ஏற்படும் தலைவலி குறையும்.

4.கிராம்பை எடுத்து சிறிது நீர் விட்டு நன்றாக அரைத்து தலைவலியின் போது சிறிது எடுத்து நெற்றியில் பூசி வந்தால் தலைவலி குறையும்.

5. 2 மிளகை எடுத்து அதை சிறிது தேங்காய் எண்ணெயை விட்டு நன்கு அரைத்து நெற்றியில் தடவி பற்று போட்டு வந்தால் தலைவலி குறையும்.


6.கடுகுத்தூள், அரிசி மாவு இவைகளை சரிபாதியாக எடுத்து வெந்நீர் கலந்து களிபோல் கிளறி அதை நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

7. முள்ளங்கிச் சாறு எடுத்துப் பருகி வந்தால் தலைவலி குறையும்.

8.புதினா இலைகளை இடித்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசி வந்தால் தலைவலி குறையும்.

9.டீ அல்லது காப்பியில் சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு கலந்து குடித்து வந்தால் தலைவலி குறையும்.

மேற்சொன்ன வைத்திய முறைகள் திடீரென தோன்றும் தலை வலிக்கு தான் பொருந்தும் .சில நாள்பட்ட தலைவலிக்கு மருத்துவரை அணுகவேண்டும் .




JOIN KALVICHUDAR CHANNEL