t> கல்விச்சுடர் நாளை பதவியேற்க உள்ள தமிழக அமைச்சரவைப் பட்டியல் அறிவிப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

6 May 2021

நாளை பதவியேற்க உள்ள தமிழக அமைச்சரவைப் பட்டியல் அறிவிப்பு


தமிழக முதல்வராக நாளை பதவியேற்கவிருக்கும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களின் பட்டியல் வெளியானது.



தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நாளை பொறுப்பேற்க உள்ளார். இந்த நிலையில் தமிழக அமைச்சரவைப் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில்,

1. முதல்வர் ஸ்டாலின் - பொது, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி, மற்ற அகில இந்திய பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை, சிறப்பு முயற்சி, சிறப்புத் திட்ட செயலாக்கம், மாற்றுத் திறனாளிகள் நலன் ஆகிய துறைகளை ஏற்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. துரை முருகன் - சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத் திட்டம், மாநில சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டுகள், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்.

3. கே.என். நேரு - நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி, குடிநீர் வழங்கல்

4. இ. பெரியசாமி - கூட்டுறவு, புள்ளியியல் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலன். 

5. பொன்முடி - உயர்கல்வித் துறை, தொழிற்கல்வி, மின்னணுவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல்

6. எ.வ. வேலு - பொதுப் பணிகள் (கட்டடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்

7. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் - வேளாண்மை, கூட்டுறவு சங்கங்கள், தோட்டக்கலை

8. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் - வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை ஆட்சியர்கள், பேரிடர் மேலாண்மை

9.தங்கம் தென்னரசு - தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை, தொல்பொருள்

10. எஸ். இரகுபதி - சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம்

11. சு. முத்துசாமி - வீட்டுவசதி, ஊரக வீட்டு வசதி, நகரமைப்புத் திட்டமிடல் மற்றும் வீட்டு வசதி மேம்பாடு, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்.

12. கே.ஆர். பெரியகருப்பன் - ஊரக வளர்ச்சி, ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரகக் கடன்கள்.

13. தா.மோ. அன்பரசன் - ஊரகத் தொழில்கள், குடிசைத் தொழில்கள் உள்பட சிறு தொழில்கள், குடிசை மாற்று வாரியம்.

14. மு.பெ. சாமிநாதன் - செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில் நுட்பவியல் மற்றும் திரைப்படச் சட்டம், பத்திரிகை அச்சுக் காகிதக் கட்டுப்பாடு, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம்.

15. பி. கீதா ஜீவன் - மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமூக நலம், சமூக சீர்திருத்தம் மற்றும் சத்துணவுத் திட்டம்

16. அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் - மீன்வளம் மற்றும் மீன் வளர்ச்சிக் கழகம், கால்நடை பராமரிப்பு

17. ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் - போக்குவரத்து, நாட்டுடமையாக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் இயக்கூர்தி சட்டம்

18. கா. ராமச்சந்திரன் - வனம்

19. அர. சக்கரபாணி - உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு, விலைக்கட்டுப்பாடு

20. வி. செந்தில் பாலாஜி - மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் கருப்பஞ்சாற்றுக் கசண்டு (மொலாசஸ்)

21. ஆர். காந்தி - கைத்தறி மற்றும் துணிநூல்

22. மா. சுப்பிரமணியம் - மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன்

23. பி. மூர்த்தி - வணிக வரிகள், பதிவு மற்றும் முத்திரைத்தாள் சட்டம், 

24. எஸ்.எஸ். சிவசங்கர் - பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலன்

25. பி.கே. சேகர் பாபு - இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை 

26. பழனிவேல் தியாகராஜன் - நிதித்துறை திட்டம் மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை

27. சா.மு.நாசர் - பால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சி

28. செஞ்சி கே.எஸ்.மஸ்தான் - சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை 

29. அன்பில் மகேஷ் பொய்யாமொழி - பள்ளிக் கல்வித் துறை



30. சிவ.வீ. மெய்யநாதன் - சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை

31. சி.வி.கணேசன் - தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத் துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, 

32. த.மனோ தங்கராஜ் - தகவல் தொழில்நுட்பத் துறை

33. மா.மதிவேந்தன் - சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகத் துறை 

34. என்.கயல்விழி செல்வராஜ் - ஆதிதிராவிடர் நலத்துறை 




JOIN KALVICHUDAR CHANNEL