t> கல்விச்சுடர் +2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

5 June 2021

+2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு



+2 பொதுத்தேர்வு ரத்து.

தேர்வை மேலும் தள்ளிவைப்பது மாணவர்களை மனரீதியாக பாதிக்கும் என்பதால், ரத்து செய்துள்ளதாக தமிழக அரசு விளக்கம்.

மதிப்பெண் கணக்கிட்டு வழங்க பள்ளிக்கல்வி, உயர்கல்வி செயலாளர்கள், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர், பள்ளி தலைமை ஆசிரியர்கள் கொண்ட குழு உருவாக்கப்படும்.

பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் தலைமையில் குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் +2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும். தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளை நடத்துவது உகந்ததாக இருக்காது. தேர்வு இல்லாமல் வழங்கப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் உயர்கல்விக்கான சேர்க்கை நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.



JOIN KALVICHUDAR CHANNEL