t> கல்விச்சுடர் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மாவட்ட வாரியான விவரம் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

27 June 2021

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மாவட்ட வாரியான விவரம்

மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,127 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,65,874 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக கோவையில் 649 பேருக்கும், ஈரோட்டில் 530 பேருக்கும், சேலத்தில் 343 பேருக்கும், திருப்பூரில் 316 பேருக்கும், சென்னையில் 308 பேருக்கும், நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து இன்று மேலும் 7,159 போ் விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதனால் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 23,90,783-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 42,801 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கரோனா பாதிப்புக்குள்ளாகி இன்று மேலும் 91 போ் பலியாகினர். 





JOIN KALVICHUDAR CHANNEL