வகை 1ல் உள்ள மாவட்டங்களில் நோய்த் தொற்று குறைந்து
வருவதைக் கருத்தில் கொண்டு ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள
சில கடைகள் / செயல்பாடுகளுக்கு மாலை 7.00 மணி வரை
நேரத் தளர்வு அளிப்பதுடன், கூடுதலாக பின்வரும் செயல்பாடுகளும்
அனுமதிக்கப்படுகிறது.
> தேநீர்க் கடைகளில் காலை 6.00 மணி முதல் மாலை 7.00
மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும்.
> மின் பொருட்கள், பல்புகள், கேபிள்கள், ஸ்விட்சுகள் மற்றும்
ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முத
ல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
> ஹார்டுவேர் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00
மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
> கல்விப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் விற்பனை
செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00
மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
> காலணிகள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி
முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
> பாத்திரக் கடைகள், பேன்ஸி, அழகு சாதனப் பொருட்கள்,
போட்டோ/ வீடியோ, சலவை, தையல் அச்சகங்கள், ஜெராக்ஸ்
கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை
செயல்பட அனுமதிக்கப்படும்.
> மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக
மின் பொருட்களின் விற்பனை மற்றும் பழுதுநீக்கும் கடைகள்
காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்
பட அனுமதிக்கப்படும்.
வகை 3-ல் உள்ள மாவட்டங்களில்
ஏற்கனவே
அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுக்கான நோத் தளர்வுகளுடன்
கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கும் அனுமதி
அளிக்கப்படுகிறது.
அனைத்து தனியார் நிறுவனங்கள், 100%
பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
அனைத்துக் துணிக்கடைகள், குளிர் சாதன வசதி
இல்லாமலும் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன்
காலை 9.00 மணி முதல் பாலை 7.00 மணி வரை
செயல்பட அனுபதிக்கப்படும்.
* அனைத்து நகைக்கடைகள்
குளிர் சாதன வசதி
இல்லாமலும் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன்
காலை 9.00 மணி முதல் பாலை 7.00 மணி வரை
செயல்பட அனுமதிக்கப்படும்.
* வணிக வளாகங்கள் (Shopping Complex : kalls| காலை
9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். எனினும், வணிக வளாகங்களில் உள்ள
உணவகங்களில் பார்சல் உணவு மட்டும் அனுமதிக்கப்படும்.
திரையரங்குகள் மற்றும் விளையாட்டுக் கூடங்களுக்கு
அனுமதி இல்லை.
- கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் தர்காக்கள்
உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் நிலையான
வழிகாட்டு நடைமுறைகளை
பின்பற்றி செயல்பட
அனுமதிக்கப்படும். அர்ச்சனை, திருவிழாக்கள் மற்றும்
குட முழுக்கு நடத்த அனுமதி இல்லை.
* காலை 6.00 பணி முதல் இரவு 9.30 மணி வரை
விளையாட்டு பயிற்சி குழுமங்கள் இயங்கவும்,
பார்வையாளர்கள் இல்லாமல், திறந்த வெளியில்
விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும், அனுமதிக்கப்படும்.
*25.06.2021 இன்றைய ஊரடங்கின் முக்கிய அறிவிப்புகள்
*தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி கிடையாது.
*தொற்று அதிகம் பாதிக்கப் பட்டுள்ள 11 மாவட்டங்களுக்கு மேலும் கூடுதலாக சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
*11 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தொடங்கப்படும் என அறிவிப்பு.
*தொற்று குறைந்துள்ள 23 மாவட்டங்களில் 50 சதவீத பயணிகளுடன் மாவட்டத்திற்கு உள்ளேயும் மாவட்டம் விட்டு மாவட்டம் பயணிக்கலாம் பொது போக்குவரத்தை துவங்க அனுமதி.
*23 மாவட்டங்களில் கோவில்கள், சர்ச் மசூதிகள் செயல்பட அனுமதி.