t> கல்விச்சுடர் சுவையான சாக்லேட் குல்பி செய்வது எப்படி? - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

17 June 2021

சுவையான சாக்லேட் குல்பி செய்வது எப்படி?

*சாக்லேட் குல்பி:-*


*தேவையான பொருட்கள் :

பொருள்அளவு பால்1 லிட்டர் பால் பவுடர்8 டேபிள் ஸ்பூன் சர்க்கரை பவுடர்100 கிராம் பிஸ்தாதேவையான அளவு சாக்லேட்தேவையான அளவு

*செய்முறை :

🍨 சாக்லேட் குல்பி செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, அதில் பால் பவுடர் சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். பின்னர் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாலை ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விடவேண்டும்.

🍨 பாலானது சுண்டி சற்று கெட்டியானதும், அதில் சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும். சர்க்கரை கரைந்ததும் அதனை இறக்கி, அதில் பிஸ்தா மற்றும் சாக்லேட் போட்டு நன்கு கிளறி சிறிது நேரம் குளிர வைக்கவும்.

🍨 சாக்லேட் கரைந்ததும் அதனை ஒரு பேனில் ஊற்றி 2 மணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும். மேலும் 1 மணிநேரம் ஆன பிறகு அதனை வெளியே எடுத்து மிக்ஸரில் போட்டு ஒரு முறை நன்கு கலந்த பின், அதனை குல்பி மோல்டில் ஊற்றி, அதன் நடுவே குச்சியை வைத்து குளிர்சாதன பெட்டியில் வைத்து 7 மணி நேரம் கழித்து எடுத்தால் சாக்லேட் குல்பி ரெடி.

JOIN KALVICHUDAR CHANNEL