t> கல்விச்சுடர் தொப்பைக்கு குட் பை சொல்லனுமா? அப்போ இதை ட்ரை‌ பண்ணுங்க - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

3 July 2021

தொப்பைக்கு குட் பை சொல்லனுமா? அப்போ இதை ட்ரை‌ பண்ணுங்க

 

தொப்பை குறைய :

இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.


இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.

இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.



சோம்பு நீர் :

சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள கொழுப்புச்சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும். சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம், அதிகமாக சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும்.


பப்பாளி காய்:

பப்பாளிக் காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். வாரம் இருமுறை செய்து சாப்பிடுங்கள். கொழுப்பு கரையும்.


சுரைக்காய் :

சுரைக்காய் வாரத்திற்கு 2 தடவை சமைத்து சாப்பிடுங்கள். கொழுப்பை கரைக்கும். உடலில் தனியிருக்கும் அதிகப்படியான நீரை வெளியேற்றும்.



JOIN KALVICHUDAR CHANNEL