திருக்குறள்:
குறள் 113:
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.
விளக்கம்:
நன்மையே தருவதாக இருந்தாலும் நீதியை விட்டு விலகுவதால் வரும் லாபத்தை, அப்பொழுதே விட்டு விடுக.
பழமொழி :
Today a reader,tomorrow a leader.
இன்று வாசிப்பவர், நாளை வழிகாட்டுபவர்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. வாழ்க்கையில் ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிடுதல் மிக அவசியம்.
2. எனவே எந்த செயலையும் செய்யும் முன் திட்டமிடுவேன், செயல்படுவன்.
பொன்மொழி :
ஆச்சரியங்களைக் கண்டு வியப்படையாமல் ,அதன் தொடக்கப் புள்ளியிலிருந்து ஆராய்வதில் தான் வெற்றியாளனின் பயணம் தொடர்கிறது.
பொது அறிவு :
01.இடிதாங்கியை கண்டுபிடித்தவர் யார்?
பெஞ்சமின் பிராங்கிளின்
Benjamin Franklin
02.தமிழ்நாட்டில் காற்றாலைகள் அதிகம் உள்ள இடம் எது?
முப்பந்தல் - கன்னியாகுமரி
Muppandal - Kanyakumari
English words :
Hamster - a wild nocturnal animal. வெள்ளெலி.
1. தனிமை விரும்பி. தன் சொந்த இனத்தோடு கூட வாழ விரும்பாது.
2. முன்னும் பின்னும் ஒரே வேகத்தில் ஓடக்கூடியது
Grammar Tips:
L:
Often silent after 'a', 'o', or 'u' (e.g., talk, walk, would).
N:
Silent after 'm at the end of a word (e.g., autumn, hymn).
அறிவியல் களஞ்சியம் :
குழந்தை பிறக்கும் பொழுது 300 எலும்புகள் இருக்கும். இவற்றில் 94 எலும்புகள் இளகி மற்றவற்றுடன் இணைந்து வளர்ந்த பருவத்தில் 206 ஆகிறது. எடையை தாங்குவதில் எலும்புகள் கருங்கல்லை விட உறுதியானவை. ஒரு தீப்பெட்டி அளவு உள்ள எலும்பு 9 டன் எடையை தாங்கும் அதாவது கருங்கல்லை போல நான்கு மடங்கு அதிகம்.
ஜூலை 18
நெல்சன் மண்டேலா அவர்களின் பிறந்தநாள்
நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela, 18 சூலை 1918 – 5 திசம்பர் 2013), தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாரா கொரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். 1990 இல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்கினார். மண்டேலா, இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை மக்களாட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர். அமைதிவழிப் போராளியாக, ஆயுதப் போராட்டத் தலைவனாக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி குடியரசு தலைவரரானார்
. அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. நெல்சன் மண்டேலா பன்னாட்டு நாள் (Nelson Mandela International Day) என்பது தென்னாபிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18 ஆம் நாளைக் குறிக்க ஐக்கிய நாடுகள் அறிவித்த சிறப்பு நாளாகும்.
நீதிக்கதை
நன்றி மறந்த சிங்கம்
ஒருநாள் ஒரு மரம் வெட்டுறவர் காட்டுக்குள்ள மரம் வெட்டிக்கிட்டு இருந்தாரு ,அப்ப யாரோ கத்துற மாதிரி சத்தம் கேட்டுச்சு
உடனே சத்தம் கேட்ட பக்கம் போய் பாத்தாரு அந்த விறகுவெட்டி.அங்க ஒரு சிங்கம் கூண்டுக்குள்ள அடைஞ்சு கிடைச்சது ,அத பாத்ததும் தெரிஞ்சது ஏதோ வேட்டைக்காரன் கூண்டு வச்சு அந்த சிங்கத்தை பிடிச்சிட்டான்னு.
விறகுவெட்டிய பாத்ததும் ”மனிதனே என்னை காப்பாத்துன்னு” சொல்லி கத்துச்சு அந்த சிங்கம் ,இருந்தாலும் தயக்கமா இருந்த அந்த விறகுவெட்டி ”சிங்கமே, நீ வேட்டையாடி சாப்புடுற மிருகம் உன்ன வெளிய விட்டா நீ என்ன கொன்னு தின்னுடுவன்னு” சொன்னாரு.
”மனிதனே நானே கூண்டுக்குள்ள அடிபட்டு கிடக்குறேன் என்னால உனக்கு எந்த ஆபத்தும் வராது கூண்ட தொறந்து விடு”ன்னு கெஞ்சி கேட்டுக்கிடுச்சு.
சிங்கத்தோட பேச்ச கேட்டு மனசு இறங்குன அவரு கூண்ட தொறந்து விட்டாரு ,வெளிய வந்த சிங்கம் திடீர்ன்னு அந்த மனுசன பிடிக்க பாஞ்சது.
பயந்துபோன விறகுவெட்டி ”நன்றி கெட்ட சிங்கமே, இது என்ன உன்ன காப்பாத்துன என்னையே கொல்ல வரேன்னு” கத்துனாரு
அப்ப அந்த சிங்கம் சொல்லுச்சு ”என்னோட குணம் உனக்கு தெரியாதா? ,நான் ஒரு வேட்டை மிருகம்னு தெரிஞ்சும் என்ன விடுவிச்ச உனக்கு என்ன நடந்தாலும் அதுக்கு நான் பொறுப்பில்லன்னு” சொல்லி அவரு மேல குதிக்க ஆரம்பிச்சது.
சிங்கத்த நம்புனது ரொம்ப தப்புனு நினச்சு வருத்தப்பட்ட மனுஷன் அந்த சிங்கத்துக்கு உணவா ஆகுறது தனக்கு கிடைச்ச தண்டனைனு நினச்சுகிட்டு இருக்கும்போது அங்க ஒரு நரி வந்துச்சு.
”நரியாரே! நரியாரே! என்ன காப்பாத்துங்க”ன்னு சொல்ல, நடந்தத தெரிஞ்சுக்கிட்ட நரி அந்த மனுசன காப்பாத்த நினைச்சது
அது ”எப்படி சிங்கத்த நீ காப்பாத்துனனு” கேட்டுச்சு , உடனே சிங்கம் சொல்லுச்சு ”நான் இந்த கூண்டுக்குள்ள இருந்தப்பனு” கதைய சொல்ல ஆரம்பிச்சது.
”இருங்க இருங்க சிங்கராஜாவே, அது எப்படி நீங்க கூண்டுக்குள்ள மாட்டுனீங்க ,இந்த மனுஷன் எந்த பக்கம் இருந்து வந்தான் ,எப்படி இவனால கூண்ட தொறக்க முடிஞ்சதுன்னு” கேள்வி கேட்டுகிட்டே இருந்துச்சு.
அப்ப சிங்கம் நடந்தத நடிச்சு காமிக்க ஆரம்பிச்சது,அப்ப சொல்லுச்சு ”நான் இந்த கூண்டுக்குள்ள இருந்தானான்னு” சொல்லிகிட்டே கூண்டுக்குள்ள போச்சு சிங்கம் ,இதுதான் சமயம்னு டக்குனு கூண்ட மூடிடுச்சு நரி.
”இது என்ன தீர்ப்பு சொல்ல வந்த நீ இப்படி பண்ணலாம்ணு” கேட்டது , ”வேட்டையாடுற உன்னோட குணத்த எப்படி உன்னால மாத்திக்க முடியாதோ ,அதுமாதிரி அடுத்தவங்களை ஏமாத்துற பழக்கத்த என்னால விட முடியாதுன்னு” சொல்லி அந்த மனுசன காப்பாத்துச்சு அந்த நரி.
அப்பத்தான் அந்த சிங்கத்துக்கு ஒரு குறள் ஞாபகத்துக்கு வந்துச்சு
தனக்கு நன்மை செய்ய வந்த மனுசன கொல்ல நினைச்சது தன்னோட நன்றி இல்லாத தனம். அதனால தனக்கு கிடைச்ச தண்டனை சரிதான்னு நினைச்சது .
இன்றைய செய்திகள்
18.07.2025
⭐மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவு
⭐தி.நகரில் ரூ.254 கோடியில் 5 மாடிகளுடன் பிரமாண்ட புதிய பஸ் நிலையம்
⭐பீகாரில் 125 யூனிட் வரை மின்சாரம் இலவசம் முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவிப்பு
⭐அமெரிக்காவில் பெய்து வரும் கனமழையால் நியூயார்க் & நியூ ஜெர்சியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பல நெடுஞ்சாலைகள், சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் மூழ் கின.போக்குவரத்து கடும் பாதிப்பு.
🏀 விளையாட்டுச் செய்திகள்
🏀ஆஸ்திரேலியா தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுகிறார் அந்த்ரே ரஸல்.
🏀ரேபிட் செஸ் போட்டி: உலகின் நம்பர் 1 வீரரான கார்ல்சனை வீழ்த்தி பிரக்ஞானந்தா வெற்றி
Today's Headlines
⭐ Tamil Nadu Chief Minister ordered the officials to complete the stormwater drainage work quickly
⭐ A grand new 5-storey bus stand in T. Nagar for Rs 254 crore
⭐Bihar CM Nitish Kumar announced the free electricity units up to 125 units
⭐The heavy rains in the United States of America have caused flooding in New York and New Jersey, flooding many highways and subways, and severely affecting traffic.
SPORTS NEWS
🏀Andre Russell retires from international cricket with the Australia series.
🏀Rapid Chess Tournament: Praggnanandhaa beats world No. 1 Carlsen.