. -->

Now Online

FLASH NEWS


Friday 23 July 2021

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் மறுப்பு செய்தியை எதிர்பார்க்கிறோம் ஒய்வு பெறும் ஊழியர்களுக்கு பான்டா..?




அரசு ஊழியர்கள்
ஒய்வு பெறும் வயது 59 என்பதை 60 ஆக அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உயர்த்தியதை... 

அன்றைய எதிர்கட்சி தலைவரும் இன்றைய மாண்புமிகு முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் வரவேற்றார்.

ஒய்வு பெறும் வயதை 58 ஆக குறைக்க வாய்ப்பில்லை..

ஆனால், ஒய்வு பெறுபவர்களுக்கு பாண்டு கொடுப்பதற்கு நிதி துறை அமைச்சர் திட்டமிடுகிறார் என்று நாளிதழ்களில் செய்தி வெளிவருகிறது.

கடந்த 2003 ம் ஆண்டு, அன்றைய தமிழக முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா அவர்கள் ஓய்வூதிய பலன்களை  பறித்ததுடன்,
ஒய்வு கால பணப்பலன்களை பாண்டாக வழங்க உத்திரவிட்டார்.

செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் உத்திரவை எதிர்த்து
எஸ்மா டெஸ்மா சட்டங்களுக்கு 
அஞ்சாமால் 
2003 ம் ஆண்டு வீரம் செறிந்த வேலை நிறுத்தம் நடைபெற்றது.

பாண்ட் வழங்கும் ஜெயலலிதா அவர்களின் உத்திரவை
எதிர்த்ததோடு,
அரசு ஊழியர் வேலை நிறுத்ததை ஆதரித்ததால்,
முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் மீது டெஸ்மா சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வேலை நிறுத்ததில் பங்கேற்ற 
1,75, 000 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.

6,376 பேர் 6 மாதம் டிஸ்மிஸ்... ல் இருந்தனர்.

999 பேர் 9 மாதங்கள் டிஸ்மிஸ்...ல் இருந்தனர்.

வேலை நிறுத்தத்தின் விளைவாக ஓய்வூதியப் பணப்பலன்களை பான்டாக கொடுக்கும் முடிவை செல்வி ஜெ. ஜெயலலிதா வாபஸ் வாங்கினார்.

மேலும், டிஸ்மிஸ் செய்யப்பட்ட அனைவருக்கும் மீண்டும் பணி வழங்கியதுடன்,

வேலை நிறுத்த காலத்தை ஈட்டிய விடுப்பாக 
ஜெ. ஜெயலலிதா அறிவித்தார்.

செல்வி.ஜெயலலிதா அவர்களின் நடவடிக்கைக்கு எதிர் நடவடிக்கையாக... பகை முடிக்கும் பணி முடிக்க...

2004 ம் ஆண்டு  நாடாளுமன்ற தேர்தலின்போது அரசு ஊழியர், ஆசிரியர்கள் தேர்தல் களத்தில் இறங்கி தீவிரமாக ஈடுபட்டதன் விளைவு 40 க்கு 40 என அனைத்து தொகுதிகளிலும் அதிமுக தோல்வி அடைந்தது.

2006 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சியை பறி கொடுத்தது.

17 சட்டமன்ற தொகுதிகளில் தபால் வாக்கு தான் திமுக.. வின் வெற்றியை தீர்மானித்தது.

வரலாற்றை நிதித் துறை அலுவலர்களுக்கு நினைவூட்டுவது நமது கடமை.

தமிழக அரசுக்கு நிதித் துறை அலுவலர்கள் தவறாக வழிகாட்டுகிறார்கள்.

*தமிழக அரசுக்கு, அரசு ஊழியர்களுக்கு இடையே மோதலை உருவாக்க நிதித் துறை அலுவலர்கள் மேற்கொள்ளும் சூழ்ச்சி இது.

*எனவே, ஒய்வு பெறுவர்களுக்கு பாண்டு வழங்குவது தொடர்பான செய்திக்கு முதல்வர் மறுப்பு தெரிவிப்பார் என்று நம்புகிறோம்.