. -->

Now Online

FLASH NEWS


Wednesday 21 July 2021

உங்கள் சிறுநீரகம் சிறப்பாக செயல்பட எவ்வளவு தண்ணீர் எந்த நேரத்தில் எப்படி குடிக்கணும் தெரியுமா?




உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் உடலில் இருக்கும் கழிவுகள் அவ்வ போது வெளியேறவும் வேண்டும். இந்த கழிவுகளை சுத்தம் வெளியே அனுப்பும் வேலை யை செய்வதுதான் நம் உடலில் இருக்கும் சிறுநீரகம். சிறுநீரகத்தின் ஆரோக்கி யத்தில் பாதிப்பு உண்டாகும் போது போது உடலின் இயல்பான பணிகள் பாதிப்புக்குள்ளாகிறது.

உடலில் இருக்கும் அதிகப்படியான கால்சியம், யூரிக், ஆக்சிலேட் போன்றவை சிறுநீர் வழியாக வெளியேற வேண்டும். இவை வெளியேறாமல் சிறுநீரகப்பாதையை அடைத்து கொண்டு நிற்கும் போது, தேங்கும் போது அவை படிமங்களாக படிந்து நாளடைவில் கற்கள் போன்று கடினமாக மாறும். இப்படி மாறுவதற்கு அதிக நாட்கள் ஆககூடும் என்றாலும் இந்த கற்கள் பலவகைப்படும்.


கற்களின் அளாவு மற்றும் எந்தவிதமான கற்கள் என்பதை பொறுத்து மருத்துவர்கள் அதற்குரிய சிகிச்சை அளிப்பார்கள்.

மூளை, இதயம், தசை, சருமம், நுரையீரல், ரத்த ஓட்டம் சரியாக இருக்கத் தினமும் போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டியது அவசியம் என்கின்றனர் பொது மருத்துவர்கள்.

தண்ணீர்தான் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், உடலின் வெப்பநிலையைப் பராமரிக்கவும், ஊட்டச்சத்துக்களை உடல் முழுவதும் கொண்டு செல்லவும், மூட்டுக்களுக்கு உராய்வு பொருளாகவும், அதிர்வைத் தாங்கும் பொருளாகவும் இருக்கிறது.

இதனால், ஒரு நாளைக்கு எட்டு டம்ளர் தண்ணீர் எடுக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால், தண்ணீர் அருந்துவதைக் கணக்கிடும் நாம், நம்முடைய உணவிலும் தண்ணீர் இருக்கிறது என்பதை மறந்துவிடுகிறோம்.

காய்கறி, பழங்களில் அதிக அளவு நீர்ச்சத்து உள்ளது. குறிப்பாக நீர்க்காய்கறிகள், தர்பூசணி உள்ளிட்ட பழங்களில் தண்ணீர்தான் பிரதானமாக இருக்கிறது. தினசரி காய்கறி, பழங்களைச் சாலடாகச் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியம் மேம்படும்.

இதுதவிர நாம் அருந்தும் காபி, டீ, ஜூஸ் உள்ளிட்டவற்றிலும் தண்ணீர் இருக்கிறது. இவை அனைத்தில் இருந்தும் ஒரு நாளைக்குத் தேவையான நீர்ச்சத்தில் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் இதில் இருந்தே கிடைத்துவிடும்.சிறுநீரகத்தில் கல் வரக்கூடாது. வரும் கல் சிறியதாக இருக்கும் பட்சத்தில் அதை வெளி யேற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக திரவ ஆகாரம் அதிகமாக எடுத்து கொள்ள வேண்டும். தினமும் 4 முதல் 5 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது கல்லை நீர்த்து போக செய்து வெளியேற்ற உதவும். தண்ணீருக்கு இணையாக பழச்சாறுகளும் அவ்வ போது எடுத்துகொள்ளலாம். தினமும் இளநீர், பார்லி வேகவைத்த நீர், நீர்மோர் போன்ற வையும் நன்மை பயக்கும். இயன்றவரை தண்ணீர் குடித்துகொண்டே இருந்தால் சிறுநீரகத்தில் இருக்கும் கற்கள் வலியின்றி வெளியேறிவிடக்கூடும்.இதனோடு வாழைத்தண்டு சாறு, முள்ளங்கி சாறு போன்ற நீர்ச்சத்து நிறைந்தவற்றை சாறாக்கிகுடித்துவருவதும் நன்மை பயக்கும். ஒரு தம்ளர் தண்ணீரில் ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து குடித்துவரலாம். சிறுதானியங்களையும் உணவில் சேர்த்துவர வேண்டும். எனினும் திரவ உணவுகள் சிறுநீரக கற்களை வெளியேற்றுவதோடு மீண்டும் வரவிடாமல் தடுப்பதால் திரவ ஆகாரங்களை அதிகம் எடுப்பது நல்லது.