. -->

Now Online

FLASH NEWS


Saturday 16 October 2021

3, 5, 8, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பரில் திறனறித் தேர்வு: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

3, 5, 8, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு NAS எனப்படும் தேசிய நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. கரோனா தொற்றால் மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் குறைபாட்டைக் கண்டறியும் இந்தத் தேர்வு நவம்பர் 12-ம் தேதி நடைபெற உள்ளது.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாகக் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் பள்ளிகள் முழுமையாகத் திறக்கப்படவில்லை. கடந்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்பட்டபோது ஏற்பட்ட கரோனா 2-வது அலையால் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன. அவர்களுக்குச் சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுப் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே கரோனாவால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பைக் கணக்கிட்டு, அதைக் குறைக்கும் வகையில் திறனறித் தேர்வை (National Achievement Survey -NAS 2021) நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. நாடு முழுவதும் நவம்பர் 12-ம் தேதி இந்தத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் நவம்பர் 1 முதல் 1ஆம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் 3, 5, 8, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தத் தேர்வு நவம்பர் 12-ம் தேதி நடைபெறுகிறது. கற்றல் குறைபாட்டைப் போக்குவதற்காகத் தேர்வை நடத்தி, மாணவர்களின் திறனை மதிப்பிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்குக் கற்றல் சார்ந்து பயிற்சி அளிக்க வேண்டும் என்று பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.