அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடனும் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், செயலாளர் காகர்லா உஷா, இயக்குநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகின்றன.