இன்று (31.12.2021) கொரோனா தொற்றினால் மேலும் 1155 பேர் பாதிப்பு
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,155- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 27,48,045- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 603- பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புக்கு இன்று 11 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பைக் கண்டறிய 1,04,615- மாதிரிகள் இன்று பரிசோதிக்கப்பட்டுள்ளன. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 6,929- ஆக அதிகரித்துள்ளது