தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 28,561 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி.
தமிழகத்தில் இன்று புதிதாக 28,561 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 30,45,796ஆக அதிகரித்துள்ளது. 19,978 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், குணமடைந்தோர் எண்ணிக்கை 28,26,479ஆகவும், 39 பேர் இறந்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37,112ஆகவும் அதிகரித்துள்ளது. தற்போது 1,79,205 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.