தமிழக சுகாதாரத் துறை காய்ச்சல், சளி, மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டால் உடனடியாக கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் ஏற்கனவே கரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தும் அறிகுறி இல்லாதவர்கள் பரிசோதனை செய்ய தேவை இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், கர்ப்பிணி பெண்கள் , நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் கரோனா பரிசோதனை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் சுகாதாரத் துறை சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சளி, காய்ச்சல், இருமல், உடல்வலி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் இருந்தாலே அவர்கள் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த அறிகுறி உடையவர்கள் பரிசோதனை மேற்கொள்வது கட்டாயம்.
தொற்று பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த 60வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பரிசோதனை கட்டாயம்.
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த அறிகுறி இல்லாத நபர்கள் தொற்று பரிசோதனை மேற்கொள்ளத் தேவை இல்லை.
தொற்று உறுதியாகி கோவிட் சிகிச்சை மையங்கள் அல்லது வீட்டு தனிமையில் உள்ளவர்கள் தொடர்ந்து 3 நாட்கள் காய்ச்சல் இல்லாமல் இருந்தாலே 7வது நாள் முடிந்து தொற்று பரிசோதனை மேற்கொள்ளாமல் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம்.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் முழுமையாக குணமடைந்த பிறகு தான் டிஸ்சார்ஜ் செய்யப்பட வேண்டும்-வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.