t> கல்விச்சுடர் உடலில் ஏற்படும் சின்ன சின்ன நோய்களை தீரக்க கூடிய சில எளிய மருத்துவ குறிப்புகள் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

5 February 2022

உடலில் ஏற்படும் சின்ன சின்ன நோய்களை தீரக்க கூடிய சில எளிய மருத்துவ குறிப்புகள்


உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்.

துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப்புண் ஏற்படாது.

1/4 தேக்கரண்டி கரு மிளகுத்தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3, 4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால் உடல் எடை குறையும்.

காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும் ,3, 4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.

தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10, 12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும் 3, 4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.

கடுமையான இருமல் இருந்தால் 3கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வரவும். வலி குறையும்.

சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போட்டு குளிக்கவும். விரைவில் தழும்புகள் மறையும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும், இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தால் விரைவில் இருமல் நிற்கும். காய்ச்சல் குறையும்.

வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.


JOIN KALVICHUDAR CHANNEL