கடைகளில், நாம் வாங்கும் பொருட்களுக்கு கொடுக்கப்படும் warranty, Guarantee-க்கு உள்ள வித்தியாசம் என்ன? வாங்க பார்க்கலாம்.
வாங்கும் பொருளை பொறுத்து, வாங்கிய தேதியிலிருந்து குறிப்பிட்ட மாதம் அல்லது வருடம், warranty கொடுக்கப்படும்.
உதாரணமாக, குளிர்சாதன பெட்டிக்கு 10 வருடங்கள் warranty கொடுக்கப்பட்டிருக்கிறது, எனில் அந்த 10 வருடத்திற்குள் குளிர்சாதன பெட்டியில் பழுது ஏற்பட்டாலோ அல்லது சேதம் அடைந்தாலோ, அதற்கு பணம் வாங்காமல், வாங்கப்பட்ட இடத்திலேயே சரி செய்து தருவார்கள் அல்லது அதற்கு பதிலாக புதிய குளிர்சாதன பெட்டியே தந்துவிடுவார்கள். அதற்கு warranty card (எழுத்துப்பூர்வமாக தரப்படும் அட்டை) அவசியம்.
Guarantee, என்பது பொதுவான வார்த்தை. மனிதர்கள், பொருட்கள் என்று அனைத்திற்கும் பொருந்தும். அதாவது, ஒரு கடையிலோ அல்லது கம்பெனியிலோ ஒரு பொருளை வாங்கினால், அந்த பொருள் நல்ல தரமானது என்பதற்காக, அவர்கள் தரும், warranty card தான் Guarantee. இதனை எழுத்துபூர்வமாக தர வேண்டிய அவசியம் இல்லை.
உதாரணமாக, இந்த மனிதர் நல்லவர் என்று மற்றொருவர் Guarantee கொடுப்பது போன்றது.