பாடத்திட்டத்தை மாற்றியமைக்க பல்துறை பேராசிரியர்கள், தொழில் நிறுவன பிரதிநிதிகள், இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள், முன்னாள் மாணவர்கள் என்று 90 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும், சர்வதேச அளவிலான தொழில்நுட்பம், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, பிற உயர்கல்வி நிறுவன பாடத்திட்டம் ஆகியவற்றை ஆராய்ந்து அதற்கேற்ப புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி இதுதொடர்பாக சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
25 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றம்
அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டங்களை மாற்றுவதற்காக புதிய குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. அனைத்து கல்லூரிகளுக்கும் இந்த குழு சென்று வர உள்ளது. அதன் பிறகு புதிய பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கும் பணி நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது.
மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையிலும், காலத்திற்கேற்ப மாற்றங்களும், அறிவி யல் ரீதியான வளர்ச்சியும் இந்த புதிய பாடத்திட்டத்தில் இருக் கும். 25 ஆண்டுகளாக மாற்றப் படாமல் இருந்த பாடத்திட்டம் இப்போது மாற்றப்படுகிறது. வளருகின்ற தலைமுறைக்கு ஏற்ப இந்த புதிய பாடத்திட்டம் அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.