வீடுகளின் தரைப்பகுதி மற்றும் வெளிப்புறத்தில் சிறிய துவாரங்கள் இல்லாமல் கவனித்துக் கொள்ளவும்.
வீட்டை சுற்றிலும் மரப் பொருட்களை சேமித்து வைக்கும் போது அவ்வப்போது கவனிக்கவும். தற்போதைய வீடுகளில் இந்த சுழல்கள் இருப்பதில்லை. ஆனால், பழங்கால வீடுகளில் கரையான்கள் வசிக்க ஏற்ற இடங்கள் இருக்கும். இவை வீட்டை சுற்றிலும் உள்ள பகுதிகளில் காணப்பட்டாலும் அது நிலத்தை துறந்து பெரும் ஆபத்தை விளைவிக்கலாம். எனவே அவற்றை கட்டுப்படுத்துவது சிறந்தது.
மிளாய்த்தூள் கரையான்களை அழிக்கும் சக்தி கொண்டது. இவற்றை மரச்சாமான்களில் தூவிவிட, கரையான்கள் அழிந்து போகும்.
வேப்பிலையை பொடியாக அரைத்து, கரையான் அரித்த மரச்சாமான்களில் தூவிவிடலாம். வேப்பிலையின் கசப்பினால் கரையான்கள் மடிந்துவிடும். அல்லது வேப்பிலையை அரைத்து தண்ணீரில் கலந்து, அதனை கரையான் படிந்த மரப்பலகைகளில் தெளிக்கலாம்.
பலகைகள், மேற்புறங்களில் “டெர்மைட் கன்ட்ரோல்” (Termite Killer) என்ற பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளித்துவிட்டால் கரையான்கள் வராது.
உப்பு கரையான்களை அழிக்கும். இவற்றை மரச்சாமான்களில் தூவிவிட அல்லது கரைத்து தெளித்துவிட, கரையான்கள் அழிந்து போகும்.
ஈரப்பதமான காலங்களில் கரையான்கள் தென்னை மரங்களை அரிக்கின்றது. இதனால் தென்னை வலுவிழந்து விடும். காய் உற்பத்தியும் பாதிக்கும். இதில் இருந்து தப்பிக்க, தென்னை மரங்களின் கீழ்ப்பகுதியில் சுண்ணாம்பு அடிக்கலாம்.