t> கல்விச்சுடர் மீண்டும் மிரட்டும் புதிய வைரஸ்! சைனாவில் Lockdown அறிவிப்பு! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

12 March 2022

மீண்டும் மிரட்டும் புதிய வைரஸ்! சைனாவில் Lockdown அறிவிப்பு!

சீனாவின் சாங்சன் பகுதியில் புதிய வைரஸ் பரவல் காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.சீனாவின் உகான் நகரில் 2019- ல் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 221-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி தற்போது வரை பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உயிர்பலி எண்ணிக்கையும் மிக அதிகமாக இருந்தது.

கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக இருந்தாலும் அதன் வைரஸ் உருமாற்றம் தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 38.74 கோடியாக அதிகரித்துள்ளது.இந்தநிலையில் சீனாவில் அடுத்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பீதியை ஏற்படுத்தி உள்ளது.இங்கு வடகிழக்கில் தொழிற்சாலைகள் நிறைந்த சாங்சன் பகுதியில் 90 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு புதிய வைரஸ் மக்களுக்கு பரவி வருகிறது.

இதையடுத்து நகர் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஏ.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது .அந்த வைரஸ் எந்த மாதிரியானது, அதன் பரவும் வேகம், பாதிக்கும் தன்மை என்ற என்பது குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.

JOIN KALVICHUDAR CHANNEL