ஆலோசனைக்கு பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
‘பொதுத்தேர்வை எழுத இருக்கும் மாணவர்களுக்கு சில பாடத்திட்டங்கள் நடத்தப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே நடத்தி முடிக்கப்பட்ட பாடத்திட்டங்களில் இருந்துதான் வினாக்கள் கேட்கப்படுமா என்ற கேள்வி மாணவர்கள், ஆசிரியர்கள் தரப்பில் எழுந்துள்ளது’ என்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு, ‘எந்த பாடத்திட்டங்களை நடத்தி முடிக்கவில்லையோ அதில் இருந்து வினாக்கள் கேட்கக்கூடாது என்பதுதான் நியாயமானது. கண்டிப்பாக அதை கவனத்தில் கொள்வோம்' என்றார்.