t> கல்விச்சுடர் ஒரே நாளில் 2000 ஐ நெருங்கும் கொரோனா தொற்று - மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

29 June 2022

ஒரே நாளில் 2000 ஐ நெருங்கும் கொரோனா தொற்று - மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்



தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,827 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

நேற்று 1,484 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த சில நாள்களாகவே தமிழகத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது.

அதில், இன்று புதிதாக 1,827 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 34,73,116-ஆக அதிகரித்துள்ளது. புதிதாக ஒருவரும் கரோனாவுக்கு உயிரிழக்கவில்லை. எனினும் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 38,026 ஆக உள்ளது.


JOIN KALVICHUDAR CHANNEL