பள்ளிகளில் மாணவர்களுக்கு செல்போனுக்கு எந்தக் காலத்திலும் அனுமதி கிடையாது. ஒருவேளை அதைமீறி யாராவது செல்போன் கொண்டுவந்தால், பறிமுதல் செய்யப்படும். அந்த செல்போன் திருப்பித்தரப்பட மாட்டாது" என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: "பள்ளிக்கு செல்போன் கொண்டுவரக் கூடாது என்று ஏற்கெனவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
சட்டமன்றக் கூட்டத் தொடரில் பேசும்போது கூறியிருந்தேன், செல்போனுக்கு எந்தக் காலத்திலும் அனுமதி கிடையாது. ஒருவேளை அதைமீறி யாராவது வகுப்பறைக்கு செல்போன் கொண்டு வந்தால், பறிமுதல் செய்யப்படும். அந்த செல்போன் திருப்பித்தரப்பட மாட்டாது என்று ஏற்கெனவே அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளோம்.
