RTE ACT அடிப்படையில் அரசு நிரந்தர பணியிடத்தில் 2013 ஆம் ஆண்டுக்கு முன்பு பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு TET நிபந்தனைகளை தளர்த்தி அரசாணை வெளியிட்டு, பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் குடும்பங்களைப் பாதுகாக்க வேண்டும் என கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள் கடந்த ஒருமாத காலம் மட்டுமே நிம்மதி மூச்சு விட்டுவருகின்றனர்.
மேலும் 2013 க்கு முன்பு நிரந்தர பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு TET லிருந்து முழுவதும் விலக்கு மற்றும் TET க்கு நிகரான புத்தாக்கப் பயிற்சி தொடர்பான அரசாணை அல்லது செயல்முறைகளை விரைந்து தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியீடு செய்தால், இந்த கல்வியாண்டை மனமகிழ்வுடன் தொடங்கி பணியில் ஈடுபட இயலும் எனவும், அதற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மற்றும் ஆணையர் ஆகியோர் ஆவண செய்யவும் வேண்டுகோள் விடுப்பதாகவும், இதுவரை பாதிப்பில் இருந்த ஆசிரியர்கள் சார்பில், 2013 க்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட அரசு உதவிபெறும் பள்ளிகளின் நிரந்தர பணியிட TET நிபந்தனை ஆசிரியர்கள் சார்பில், தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து சுமார் 1500 கடிதங்கள் அனுப்ப உள்ளோம் எனவும், தமிழக அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் திரு. செந்தில் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், கடந்த கல்வியாண்டு முழுமைக்கும் கற்பித்தல் பணியில் ஈடுபட்டு, பின்னர் தேர்வுப்பணி, மதிப்பீடு பணி, விடுமுறை இல்லாமல் உடனடியாக இந்த புதிய கல்வியாண்டின் தொடக்கப் பணிகள் என தொடர்ந்து பணியில் உள்ள இந்த நிரந்தர பணியிட ஆசிரியர்கள் பெரும்பாலும் 50 வயதைக் கடந்தும் விட்டனர். தற்போது வரும் ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறவுள்ள TET தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கும் முன்பே (2013 க்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட நிரந்தரமாக பணியில் சேர்ந்த அரசு / அரசு உதவிபெறும் / சிறுபான்மை / சிறுபான்மையற்ற) TET லிருந்து முழுவதும் விலக்கு என்ற அரசாணையை இந்த சமூகநீதியை என்றும் பாதுகாக்கும் இந்த விடியல் ஆட்சி விரைவில் வெளிவிடும் என பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.