இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் தங்களின் காலில் ஊசி குத்துவது போன்ற உணர்வை அனுபவிக்கிறார்கள்.
குறிப்பாக இம்மாதிரியான பிரச்சனையை இரவு நேரத்தில் தான் எதிர்கொள்கிறார்கள்.
இதனால் இரவு நேரத்தில் தூக்கம் வராமல் அவதிப்படுகிறார்கள்.
இந்த பிரச்சனை இப்படியே அதிகரித்தால், தூக்கம் சரியாக கிடைக்காமல் எந்நேரமும் ஒய்வின்றி சோர்வுடன் இருக்கக்கூடும்.
இப்படி ஏற்படுவதற்கு பின் பல காரணங்கள் உள்ளன.
ஒருவருக்கு நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டாலும் இது ஏற்படலாம்.
அதே வேளையில் உடலில் பல வைட்டமின்கள் போதுமான அளவில் இல்லாவிட்டாலும் இம்மாதிரியான பிரச்சனையை சந்திக்க நேரிடும்.
முக்கியமாக சர்க்கரை நோயாளிகள் இம்மாதிரியான பிரச்சனையால் தினமும் அவதிப்படுவார்கள்.
இந்த பிரச்சனையை அளவுக்கு அதிகமாக அனுபவித்தால், மருத்துவரை சந்தியுங்கள்.
இப்போது காலில் ஊசி குத்துவது போன்று ஏற்படும் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும் சில இயற்கை வைத்தியங்களைக் காண்போம்.
*பாதங்களில் ஊசி குத்துவது போன்ற வலிக்கு என்ன காரணம்?*
பாதங்களில் ஊசி குத்துவது போன்ற அல்லது எரிவது போன்ற உணர்வுக்கான பொதுவான காரணம் நரம்பு சேதம் ஆகும்.
இது பெரும்பாலும் சர்க்கரை நோயுடன் தொடர்புடையது.
இருப்பினும், இதற்கு பிற காரணங்களும் உள்ளன. பாத எரிச்சலால் ஏற்படும் வலி விட்டுவிட்டு அல்லது தொடர்ச்சியாக இருக்கலாம் மற்றும் லேசானது முதல் கடுமையானது வரையும் இருக்கும்.
அதோடு பாதங்கள் சூடாகவோ, கூச்சமாகவும், குத்துவது போன்றோ அல்லது உணர்வின்மையையோ உணரலாம்.
உங்களுக்கு இரவு தூக்கம் கெடும் வகையில் பாதங்களில் குத்துவது போன்ற வலியை அனுபவித்தால், அதற்கான சில வீட்டு வைத்தியங்களை இப்போது காண்போம்.
மஞ்சள் வைத்தியம் மஞ்சளில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், இது பல வழிகளில் உடலுக்கு நன்மைகளை வழங்குகிறது.
முக்கியமாக மஞ்சள் பாதங்களில் ஊசி குத்துவது போன்ற வலியை நீக்குவதில் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
அதற்கு தினமும் பாலில் சிறிது மஞ்சள் தூள் கலந்து குடியுங்கள். வேண்டுமானா, மஞ்சள் தூளை கடுகு எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயுடன் கலந்து பாதங்களில் தடவலாம்.
*பாகற்காய் இலை*
சர்க்கரை நோயாளிகள் பாகற்காயை உண்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம்.
அதுவும் பாதங்களில் ஊசி குத்துவது போன்ற வலியை உணர்ந்தால், அதற்கு பாகற்காய் இலையை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
அதற்கு பாகற்காய் இலையை அரைத்து அந்த பேஸ்ட்டை பாதங்களில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
ஆப்பிள் சீடர் வினிகர் பாதங்களில் ஏற்படும் ஊசி குத்துவது போன்ற வலியை போக்க ஆப்பிள் சீடர் வினிகர் உதவும்.
அதற்கு ஆப்பிள் சீடர் வினிகரை குடிப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.
அதுவும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.