t> கல்விச்சுடர் தீபாவளிக்கு மறுநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

22 October 2022

தீபாவளிக்கு மறுநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

தீபாவளிக்கு மறுநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்


சென்னை செல்வதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி விமான நிலையம் வந்தார். 

அப்போது அவரிடம் தீபாவளி பண்டிகைக்கு அடுத்தநாளான செவ்வாய்க்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்து அமைச்சர் கூறியதாவது:_

_தீபாவளிக்கு மறுநாள் செவ்வாய்க்கிழமையும் சேர்த்து விடுமுறை அளிப்பது குறித்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள். இந்த விடுமுறையானது பள்ளி கல்வித்துறைக்கு மட்டுமின்றி தமிழக அரசின் அனைத்து துறைகளுக்கும் பொருந்தும். எனவே இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் முடிவெடுத்து அறிவிப்பார் என்று அமைச்சர் தெரிவித்தார்.

JOIN KALVICHUDAR CHANNEL