t> கல்விச்சுடர் பஞ்சாபில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்; முதல் மந்திரி பகவந்த் மான் அறிவிப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

21 October 2022

பஞ்சாபில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்; முதல் மந்திரி பகவந்த் மான் அறிவிப்பு



பஞ்சாபில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.பஞ்சாப் மாநில மந்திரி சபை இந்த முடிவை மேற்கொண்டிருப்பதாக மாநில முதல் மந்திரி பகவந்த் மான் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, இன்று, பஞ்சாப் மந்திரி சபைக் கூட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்துகிறது. இந்த முடிவுக்கு பஞ்சாப் மந்திரிசபை முதற்கட்டமாக அனுமதி வழங்கியுள்ளது. நாங்கள் சொல்வதை செய்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

தீபாவளி பரிசாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த இருப்பதாக அவர் தெரிவித்தார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான கொள்கை முடிவு எடுத்துள்ளதாகவும், இதன் மூலம் லட்சக்கணக்கான ஊழியர்கள் பயன்பெறுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும் என தேர்தலுக்கு முன்பாக அக்கட்சி தலைவர்கள் உறுதியளித்திருந்தனர்.

JOIN KALVICHUDAR CHANNEL