t> கல்விச்சுடர் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைப்பது எப்படி? - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

26 November 2022

ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைப்பது எப்படி?





ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கும் பணியை தொடங்குவதற்கு முன்பாக தங்களது ஆதார் அட்டை மற்றும் மின்
இணைப்பு அட்டை ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும்.


ஆதார் அட்டை புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்ய வேண்டி இருப்பதால்
500 KB அளவுக்கு மிகாமல் அதனை தயாராக வைத்திருக்க வேண்டும்.


தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான
https://www.tangedco.gov.in அல்லது https://adhar.tnebltd.org/adharuplod
என்ற இணையதளத்தில் பணியை தொடங்கலாம்.


முதலில் மின் இணைப்பு எண், அதன் பின்பு மொபைல் எண்ணை
குறிப்பிட்டு அதன் மூலம் வரும் OTP எண்ணையும் பதிவிட வேண்டும்.


அடுத்த பக்கத்தில் உரிமையாளரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள்
கேட்கப்படும். இணைக்கப் போகும் ஆதார் எண் உரிமையாளருடையதா
அல்லது வாடகைதாரரின் ஆதார் எண்ணா என்று விவரமும் கேட்கப்படும்.

 உரிய தகவலை அளித்து, ஆதார் எண்ணை இடைவெளி இல்லாமல் பதிவு செய்து பின்னர், ஆதார் எண்ணில் இருக்கும் பெயரை பதிவிட வேண்டும்.


ஏற்கனவே பயனாளிகள் தயாராக வைத்திருக்கும் 500 KB அளவுள்ள ஆதார்
அட்டையின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கள் அனைத்தும் உண்மையானவை என
சான்றளித்து SUBMIT பொத்தானை அழுத்த வேண்டும்.

தொடர்ந்து ஆதார் எண் சமர்ப்பிக்கப்பட்டதற்கும் விரைவில் இணைப்பு
உறுதி செய்யப்படுவதற்குமான பதில் வரும். இதோடு ஆதாரை மின்
இணைப்புடன் இணைக்கும் பணி நிறைவடையும்.


வாடகை வீட்டில் குடியிருப்போர் மின் இணைப்புடன் தங்களது ஆதார் எண்ணை
இணைக்கலாம். வாடகைக்கு குடியிருப்போர் ஆதார் எண்ணை இணைக்கும்
போது சம்பந்தப்பட்ட நபர் தங்களது வீட்டில்தான் வாடகைக்கு குடியிருக்கிறாரா
என வீட்டின் உரிமையாளருக்கு குறுஞ்செய்தி மூலம் உறுதி செய்யப்படும்.

JOIN KALVICHUDAR CHANNEL