. -->

Now Online

FLASH NEWS


Monday 6 February 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.02.2023



திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: நடுவுநிலைமை

குறள் : 118
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.

பொருள்:
ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தராசு முள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை போற்றும் நீதிபதிகளுக்கு அழகாகும்.

பழமொழி :
It is the pace that kills.

வேகம் விவேகம் அல்ல.

இரண்டொழுக்க பண்புகள் :

1. நிறைகுடம் போல ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக உறுதியாக பேசுவேன். 

2. என் பேச்சு வெள்ளி தட்டில் வைக்கப் பட்ட பொன் பழம் போல மதிப்பிற்குரியதாக இருக்கும் படி பார்த்துக் கொள்வேன் 

பொன்மொழி :

தனது இலக்கினை அடைவதற்கான சரியான அணுகுமுறை கொண்ட ஒருவனை எதுவும் தடுத்து நிறுத்த முடியாது; தவறான அணுகுமுறை கொண்ட ஒருவனுக்கு இந்த பூமியில் எதுவும் உதவ முடியாது.

பொது அறிவு :

1. புகையிலை எதிர்ப்பு நாள் எது? 

மே 31 . 

2.அம்மோனியாவில் உள்ள நைட்ரஜனை உறிஞ்சும் தாவரம் எது? 

நெல் செடி.

English words & meanings :

when an ant becomes a spy we call him/her - inform-ant-informant
ஆரோக்ய வாழ்வு :

இயற்கை நமக்கு அற்புதமான பல அருட்கொடைகளை தந்துள்ளது. அதில் தேன் ஒரு மிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்டதாகும். தேன் மூலம் பல நோய்களை குணப்படுத்த முடியும். தேனை பொதுவாக 'வயிற்றின் நண்பன்' என கூறுவதும் உண்டு. 70 வகையான வைட்டமின் சத்துக்கள் சுத்தமான தேனில் அடங்கியுள்ளன. தேன் எண்ணற்ற சத்துக்களை இயற்கையாகவே கொண்டுள்ளது. ஆனால் கலப்படம் செய்யக்கூடிய பொருட்களில் முதலிடம் வகிப்பது தேன் தான்.




NMMS Q

இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு ___________ 

விடை:கி.பி. 1935
நீதிக்கதை

சிங்கத்தின் வீரம்

ஒரு காட்டில் சிங்கம் ஒன்று இருந்தது. அந்த சிங்கத்தின் பிடரி ரோமங்களுக்கிடையே ஒரு ஈ வாழ்ந்து வந்தது. அந்த ஈ, நான் சிங்கத்தின் பிடரி ரோமங்களுக்கிடையே வாழ்ந்திருப்பதால்தான், சிங்கம் இவ்வளவு வீரமாக இருக்கிறது. நான் இருப்பதால்தான் சிங்கம் நன்றாக வேட்டையாடி பசி இல்லாமல் இருக்கிறது.

இந்த சிங்கத்தின் வாழ்விற்கே நான்தான் காரணம். நான் இல்லாவிட்டால், சிங்கத்தால் எதுவுமே செய்யமுடியாது என்று நினைத்துக் கொண்டிருந்தது. ஒரு நாள், தலை அரித்ததால் ஒரு சிறு மரத்தில் தலையை உரசிக்கொண்டது சிங்கம். ஈ இதை எதிர்பார்க்காததால், மரத்திற்கும் சிங்கத்தின் தலைக்குமிடையே சிக்கி சற்று அழுந்திவிட்டது. மிகவும் கோபம் வந்துவிட்டது ஈ க்கு. அது பறந்து சிங்கத்தின் முன்னால் வந்து கேட்டது. 

ஏய்.... சிங்கமே! உனக்கு என்ன அறிவு கெட்டுப் போய்விட்டதா? ஏன் தலையை மரத்தில் உரசி, உன் பிடரியில் வசிக்கும் எனக்குத் தொந்தரவு செய்கிறாய்? இதோ, நான் உன்னைவிட்டு இப்போதே போகிறேன்! என்னை இழந்து நீ துன்பப்பட்டால்தான் உனக்கு என் அருமை புரியும். சிங்கத்திற்கு ஒன்றுமே புரியவில்லை. அது மீண்டும் மரத்தில் தலையை உரசியது. அப்போது, மரம் அசைந்து சருகுகள் உதிர்ந்தன.

இதைப் பார்த்துக் கத்தியது ஈ அட... முட்டாள் சிங்கமே, பார்! நான் உன்னைவிட்டுப் போகிறேன் என்று சொன்னவுடனே, காற்றடித்து சருகுகள் உன் மீது உதிர்கின்றன. இனி வரக்கூடிய துன்பங்களையெல்லாம் நன்றாக அனுபவி! இனிமேல் நான் உனக்கு உதவி செய்யமாட்டேன். பிறகு ஈ பறந்து சென்றது. இந்த ஈ இவ்வளவு காலம் என் பிடரியில் இருந்தது என்று இப்போதுதான் எனக்குத் தெரிகிறது என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டது சிங்கம். தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது என்று அகம்பாவம் கொள்பவர்கள் இந்த ஈக்களைப் போன்றவர்கள்தான். எத்தனையோ அறிஞர்களும், மகான்களும், பேராற்றல் மிக்கவர்களும் வந்து சென்ற இடம் இந்த உலகம். அந்த நினைவும், பணிவும் நமக்கு வேண்டும்.
இன்றைய செய்திகள்

06.02.2023

* டெல்டா மாவட்டங்களில் கனமழையால் 1.33 லட்சம் ஏக்கர் நெற்பயிர்களை சூழ்ந்த மழைநீர்: வேளாண் துறை கணக்கெடுப்பில் தகவல்.

* ஆய்வு, தணிக்கை குறித்த தொலைபேசி தகவலை வணிகர்கள் நம்ப வேண்டாம்: தமிழக அரசு தகவல்.

* அமெரிக்காவில் பலருக்கும் பார்வை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள குளோபல் பார்மா நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்ட மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள், விசாரணை முடியும் வரை கண் தொடர்பான மருந்துகளை உற்பத்தி செய்ய அந்த நிறுவனத்துக்கு தடை விதித்துள்ளனர்.

* உச்ச நீதிமன்றத்தின் கடும் எச்சரிக்கைக்குப்பின், கொலீஜியம் பரிந்துரைப்படி, உச்ச நீதிமன்றத்துக்கு 5 புதிய நீதிபதிகளின் நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

* கண்காணிப்பு உட்பட பலவித பணிகளுக்கு 850 நேனோ ட்ரோன் வாங்குகிறது இந்திய ராணுவம்.

* சிலியில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் பயங்கர காட்டுத் தீ: 22 பேர் பலி.

* சீனாவின் உளவு பலூன் என்று அறியப்பட்டு வந்த பலூனை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளதோடு இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

* துபாய் மெய்தான் பகுதியில் நடந்த ஓட்டப்பந்தயம்: 2-வது இடம் பிடித்த தமிழக வீரருக்கு பரிசு.

* 14 நாட்டு வீரர்கள் பங்கேற்கும் சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டி: 13-ந் தேதி தொடங்குகிறது.


Today's Headlines

* Rainwater engulfs 1.33 lakh acres of paddy crops in delta districts due to heavy rains: Agriculture department survey data.

 * Traders should not trust phone information about inspection, audit: Tamil Nadu Govt.

* Following the loss of sight to many people in the US, the Drug Control Department officials, who investigated the Global Pharma Company in Chennai, have banned the company from manufacturing eye-related drugs until the investigation is over.

* After a strong warning from the Supreme Court, the Central Government has approved the appointment of 5 new judges to the Supreme Court as per the recommendation of the collegium.

 * Indian Army is buying 850 Nano drones for various tasks including surveillance.

 * Deadliest forest fire in Chile in 100 years: 22 dead

 * The US military shot down what was known as a Chinese spy balloon. China has condemned this and said that an appropriate response will be given.

 * Race held at Dubai Maidan area: Prize awarded for 2nd runner-up from Tamil Nadu.

 * Chennai Open Challenger Tennis Tournament featuring 14 national players will Start on the 13th.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்