t> கல்விச்சுடர் தமிழ் நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.? - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

28 February 2023

தமிழ் நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.?





மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.?

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டம்
மீண்டும் வருவது குறித்து விரிவான
அறிக்கையை அனுப்ப அனைத்து துறை
செயலாளர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

புதிய ஓய்வூதிய திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற
விரும்பும் ஊழியர்களின் விவரங்களை அனுப்ப உத்தரவு

தமிழ்நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து விரிவான அறிக்கை அனுப்ப அனைத்து துறை செயலாளர்களுக்கு நிதித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டுமென பல மாநிலங்களைச் சேர்ந்த அரசுப் பணியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சில மாநில அரசுகள் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளன.

தமிழகத்தில் கடந்த 2004ம் ஆண்டு முதல் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மத்திய அரசு கடந்த 2004ம் ஆண்டு முதல் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைக்கும் பல்வேறு பலன்கள் எதுவும் கிடைப்பதில்லை என மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதையடுத்து, தற்போது ராஜஸ்தான், ஜார்கண்ட், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று கொண்டு, பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இதே போன்று அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தும், போராட்டம் நடத்தியும் வருகின்றனர். மேலும் இது தொடர்பாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் கூறியதாவது, தமிழகத்தில் திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் தாங்கள் ஆட்சிக்கு வந்ததும், பழைய பென்சன் திட்டம் அமல்படுத்தப்படும் என கூறியுள்ளது.

இந்தநிலையில், தமிழ்நாட்டில் மீண்டும் ஓய்வூதிய திட்டம் தொடர்பாக விரிவான அறிக்கையை அனுப்ப அனைத்துத்துறை செயலாளர்களுக்கு தமிழக அரசு உத்தாவிட்டுள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற விரும்பும் ஊழியர்களின் விவரங்களை அனுப்பவும் துறை ரீதியாக உத்தரவிடப்பட்டுள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL