பான் கார்டை அடையாள ஆவணமாக்க அரசு திட்டம்: நிதியமைச்சர் தகவல்
பான் கார்டை அடையாள ஆவணமாக்க அரசு திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பல துறைகள் தொடர்பான நிதி பரிவர்த்தனைக்கு நிரந்தர கணக்கு எண் (பான்) பயன்படுத்துவது அறிமுகப்படுத்தப்படும் எனவும் நிதியமைச்சர் கூறினார்.
பான் கார்டை பொது அடையாள அட்டையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை அறிவித்தார்.
நாடாளுமன்றத்தில் 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.
அப்போது அவர் பேசுகையில், பான் கார்டு இனி பொது அடையாள அட்டையாக அறிவிக்கப்படுகிறது. ஆதார், பான், டிஜிலாக்கர் முறைகள், தனிநபர் பயன்பாட்டுக்காக பிரபலப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும், வங்கிகளின் கேஒய்சி நடைமுறை எளிதாக்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதன்மூலம், நாடு முழுவதும் இனி பான் கார்டை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியும்.
அரசின் நிதி தொடர்பான அனைத்து செயல்பாடுகளுக்கும் பான் கார்டு பொது அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும்
- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்