t> கல்விச்சுடர் தமிழகத்தில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் செல்போன் கொண்டுவரத் தடை .. அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

11 March 2023

தமிழகத்தில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் செல்போன் கொண்டுவரத் தடை .. அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு!


தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச் 13-ம் தேதியும்...

11-ம் வகுப்பு மாணவர்களுக்கு,மார்ச் 14-ம் தேதியும்... 

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஏப்ரல் 6-ம் தேதியும் பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றன.

ஏப்ரல் 20 வரை பொதுத்தேர்வுகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில், தேர்வு மையத்திற்கு வரும் மாணவர்கள் செல்போன் மற்றும் தகவல் தொலைத்தொடர்பு சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்வு அறைக்குள் ஆசிரியர்களும் செல்போன் மற்றும் தகவல் தொலைத்தொடர்பு சாதனங்களை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

தடையை மீறி செல்போன் பயன்படுத்தும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

- அரசுத் தேர்வுகள் இயக்ககம்

JOIN KALVICHUDAR CHANNEL