இது குறித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:
செங்கல்பட்டு,திருப்பூர், சிவகங்கை, தஞ்சை,நாகை தூத்துக்குடி, கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, நாமக்கல், ஈரோடு காஞ்சிபுரம்,திண்டுக்கல், மதுரை மாவட்ட கலெக்டர்கள் பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன் விபரம் வருமாறு:
நாகை ஆட்சியர் அருண் தம்புராஜ், கடலூர் ஆட்சியராக நியமனம்
அரியலூர் ஆட்சியராக அன்னீ மேரி ஸ்வர்னா நியமனம்,
கிருஷ்ணகிரி ஆட்சியர் தீபக் ஜேகப், தஞ்சை ஆட்சியராக நியமனம்
புதுக்கோட்டை ஆட்சியராக மெர்சி ரம்யா நியமனம்,
நாமக்கல் ஆட்சியராக உமா நியமனம்
காஞ்சிபுரம் ஆட்சியராக கலைச்செல்வி மோகன் நியமனம்,
செங்கல்பட்டு ஆட்சியராக கமல் கிஷோர் நியமனம்
மதுரை ஆட்சியராக சங்கீதா நியமனம்,
சிவகங்கை ஆட்சியராக ஆஷா அஜித் நியமனம்
ராமநாதபுரம் ஆட்சியராக விஷ்னு சந்திரன் நியமனம்,
தூத்துக்குடி ஆட்சியராக ராகுல்நாத் நியமனம்
திருப்பூர் ஆட்சியராக கிருஸ்துராஜ் நியமனம்,
ஈரோடு ஆட்சியராக ராஜ கோபால் சுங்கரா நியமனம்
திண்டுக்கல் ஆட்சியராக பூங்கொடி நியமனம்,
நாகை ஆட்சியராக ஜானி டாம் வர்கீஸ் நியமனம்
கிருஷ்ணகிரி ஆட்சியராக சராயு நியமனம்